நடிகர் மாதவனுக்கு அழகான ‘ஐ லவ் யூ’ மெசேஜ் சொன்ன ப்ரியா பவானி சங்கர்

நடிகர் மாதவனுக்கு அழகான ‘ஐ லவ் யூ’ மெசேஜ் சொன்ன ப்ரியா பவானி சங்கர்

மாதவன் - ப்ரியா பவானி சங்கர்

நடிகை ப்ரியா பவானி சங்கர் மாதவன் நடிப்பில் உருவான ‘மாறா’ திரைப்படத்தை பார்த்துவிட்டு மாதவனின் நடிப்பை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  நடிகை ப்ரியா பவானி சங்கர் ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அதை தொடர்ந்து மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் பிசியாக வரும் ஹீரோயின்களில் ப்ரியா பவானி சங்கரும் ஒருவரும் கூறலாம். இவர் விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட போது நடிகை சிம்ரனும் மற்றும் நடிகர் மாதவனும் தான் இவருடைய ஃபேவரெட் என பல இடங்களில் பதிவு செய்துள்ளார்.

  அந்த வகையில் தற்போது மாதவன் நடிப்பில் வெளியாகிவுள்ள ‘மாறா’ திரைப்படத்தை பற்றி நடிகை ப்ரியா பவானி சங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் மாதவன் திரைப்படம் இன்று ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகிவுள்ளது. இந்த படத்தை பார்த்த பலரும் படத்தை பற்றிய கருத்துக்களை கூறி வருகின்றனர்.

  இந்நிலையில் நடிகை ப்ரியா பவானி சங்கரும் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், ‘100வது தடவை இதை சொல்கிறேன். ஐ லவ் யூ,வி லவ் யூ, எவ்ரி ஒன் லவ்ஸ் யூ.. சில நேரங்களில் உங்களின் வேலையினால் நீங்கள் வாழ்க்கையை அழகாக காட்டுகிறீர்கள், ஆனால் பல நேரங்களில் நீங்கள் நீங்களாக இருப்பதன் மூலம் அழகாக காட்டுகிறீர்கள்’ என்று கூறியுள்ளார்.


  ப்ரியா பவானி சங்கரின் இந்த பதிவை ரீட்வீட் செய்த மாதவன்,
  ‘ப்ரியா பவானி சங்கரை புகழ்ந்து உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார்’என்று பதிவிட்டுள்ளார்.

   
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்...
  Published by:Tamilmalar Natarajan
  First published: