பிரேமம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் நிவின்பாலி தனது உடல் எடையை அதிரடியாக குறைத்துள்ளார். இதுதொடர்பான அவரது புதிய படங்கள் வைரலாகி வருகிறது. 2015-ல் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட்டானது.
இந்த படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோன்னா செபாஸ்டின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பள்ளி மாணவர், காலேஜ் ஸ்டூடன்ட், 30 வயது இளைஞர் என 3 விதமான லுக்கில், நிவின் பாலி இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தமிழ்நாட்டிலும் பிரேமம் படம் சூப்பர் ஹிட்டானது.
பிரேமம் படத்தை தொடர்ந்து அதில் இடம்பெற்ற நடிகைகளுக்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. அவர்களுக்கு அடுத்தடுத்து படங்கள் குவியத் தொடங்கின. இதற்கிடையே நிவின் பாலி தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
ஆனால் கடந்த சில மாதங்களாக உடல் எடை அதிகரித்து காணப்பட்ட நிவின் பாலி, தான் விரைவில் புதிய படங்களுக்காக எடையை குறைக்கவுள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் ஸ்லிம்மான தோற்றத்தில் நிவின் பாலியுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளன.
இந்த படத்தில் மறைந்திருக்கும் கரடி பொம்மையை 12 வினாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!
நிவின் பாலி அடுத்ததாக தாரம், ஆக்சன் ஹீரோ பிஜு 2 ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்த படத்திற்காக தோற்றத்தை மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நிவின் பாலி இஸ் பேக் என தலைப்பிட்டு அவரது புதிய ஃபோட்டோக்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nivin Pauly