• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Prakash Raj: தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரகாஷ்ராஜ்...!

Prakash Raj: தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரகாஷ்ராஜ்...!

 நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ்

தெலுங்கு நடிகர்கள் சங்கமான தி மூவி ஆர்டிஸ்ட் அசோஸியேஷனின் தலைவராக இருக்கும் நரேஷின் பதவிக்காலம் இந்த வருடம் முடிவடைகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தி மூவி ஆர்டிஸ்ட் அசோஸியேஷன் (MAA) தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார்.

அரசியலில் கருத்துக்கூற ஆரம்பித்த பிறகு தேர்தல், பிரசாரம் எல்லாம் பிரகாஷ்ராஜுக்கு பிடித்துவிட்டது போல. ஏற்கனவே ஒருமுறை தேர்தலில் நின்றார். இந்தமுறை மீண்டும் நிற்கிறார். ஆனால், இது அரசியல் தேர்தல் அல்ல. தெலுங்கு நடிகர்கள் சங்கத்துக்கான தேர்தல்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெலுங்கு நடிகர்கள் சங்கமான தி மூவி ஆர்டிஸ்ட் அசோஸியேஷனின் தலைவராக இருக்கும் நரேஷின் பதவிக்காலம் இந்த வருடம் முடிவடைகிறது. புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யவதற்காக விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தமுறை நரேஷ் போட்டியிடவில்லை. அவரும் அவரது ஆதரவாளர்களும் விஷ்ணு மஞ்சுவை தலைவர் பதவிக்கு நிறுத்துகின்றனர். இவர் ரஜினியின் நண்பரான மோகன் பாபுவின் மகன். இப்போதே திரையுலகின் பெரும்புள்ளிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் விஷ்ணு மஞ்சு

Also read... Santhanam: மாஸ்டர் கதாசிரியரின் படத்தில் நடிக்கும் சந்தானம்...!

அவருக்குப் போட்டியாக பிரகாஷ்ராஜ் களமிறங்குகிறார். இந்தமுறை தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார். இப்போதைக்கு இவர்கள் இருவரும்தான் தலைவர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர்தேர்தல் என்பதால், இவை அனைத்துமே கடைசிநேர மாறுதலுக்கு உட்பட்டவை.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: