’மாஸ்டருடன் ஒரு பயணம்’ பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நடிகர்!

பொன்னியின் செல்வன் திரைப்படம்

பிரகாஷ் ராஜ் - மணிரத்னம் கூட்டணி முதன் முதலில் ‘இருவர்’ படத்தின் மூலம் இணைந்தது.

  • Share this:
இயக்குநர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளார்.

தனது நீண்ட கால கனவு திட்டமான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்குவதில் பிஸியாக இருக்கிறார் மணிரத்னம். இதில் அமிதாப் பச்சன், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.பொன்னியின் செல்வன் படத்தின் சமீபத்திய அப்டேட் என்னவென்றால், நடிகர் பிரகாஷ் ராஜ் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். பிரகாஷ் ராஜ் - மணிரத்னம் கூட்டணி முதன் முதலில் ‘இருவர்’ படத்தின் மூலம் இணைந்தது. ”மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் செட்களில்... மாஸ்டருடன் ஒரு பயணம்... 25 வருடங்களுக்கு முன்பு ’இருவர்’ படத்தில் தொடங்கிய பயணம் இது... புதிய எல்லைகளைக் கண்டுபிடிப்பதில் ஆனந்தம்!” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் பிரகாஷ் ராஜ்.

கடந்த வாரம், ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. படபிடிப்புக்கு முன்பு முழு நடிகர்களும், குழுவினரும் கோவிட் -19 சோதனை செய்யப்பட்டனர். சோதனையில் நெகட்டிவ் என்று வந்ததும் தான், படபிடிப்பை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: