• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தேர்தலில் போட்டியிட பிரகாஷ்ராஜ் வேட்புமனு தாக்கல்

தேர்தலில் போட்டியிட பிரகாஷ்ராஜ் வேட்புமனு தாக்கல்

நடிகர் பிரகாஷ்ராஜ் வேட்பு மனுத்தாக்கல்

நடிகர் பிரகாஷ்ராஜ் வேட்பு மனுத்தாக்கல்

தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் மக்களை ஏமாற்றிவிட்டன - பிரகாஷ்ராஜ்

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகர் பிரகாஷ்ராஜ் மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டிய்ட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

53 வயதாகும் நடிகர் பிரகாஷ்ராஜ் கன்னடா, தெலுங்கு, தமிழ், இந்திய ஆகிய மொழிப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருகிறார். கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ், 2017-ம் ஆண்டு இந்துத்துவ அடிப்படைவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அந்த விவகாரத்தையடுத்து, தென்னிந்திய மொழிகளில் மிகப் பிரபலமான நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் தொடர்பான கருத்துகளைப் பேசிவருகிறார்.
தொடர்ச்சியாக, பா.ஜ.க மற்றும் மோடிக்கு எதிரான கருத்துகளை வெளிப்படையாகப் பேசிவரும் அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனுத் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் மக்களை ஏமாற்றிவிட்டன. மக்களின் குராலாக நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் பாஜகவை சுமந்து செல்வதற்கு அதிமுக என்ன குதிரையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டி ஏன்? - அரசியல் ஆரம்பம் வீடியோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: