ஆண்டுதோறும் கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் 2021-ம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. 51-வது சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன் தொடக்க நிகழ்வும், நிறைவு நிகழ்ச்சியும் குறைந்தளவு பார்வையாளர்களுடன் நடத்தப்படும் என செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்த திரைப்பட விழாவில் திரையிட தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் மற்றும் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள தேன் ஆகிய இரண்டு படங்கள் தேர்வாகியுள்ளன. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அசுரன் திரைப்படம் ஏற்கெனவே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் ‘தேன்’ திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் படக்குழு ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு 23 திரைப்படங்களும், 21 ஆவணப் படங்களும் திரையிட தேர்வாகியுள்ள நிலையில் இதில் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்படும் இந்திய மொழிப் படத்துக்குத் தேசிய விருது நிச்சயம் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது.
உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.