• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • சினிமாவுக்கு போனதும் இப்படி மாறிட்டாரே! ஷாக் தரும் விஜய் டிவி சீரியல் நடிகர்!

சினிமாவுக்கு போனதும் இப்படி மாறிட்டாரே! ஷாக் தரும் விஜய் டிவி சீரியல் நடிகர்!

விஜய் டிவி நடிகர்

விஜய் டிவி நடிகர்

போட்டோவைப் பார்க்கும் ரசிகர்கள், சின்னத்தம்பி தொடரில் நடித்த பிரஜனா இது? என வாய்மேல் விரல் வைக்கின்றனர்

 • Share this:
  சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றிருக்கும் விஜய் டிவி சின்னத்தம்பி பிரஜன், மாஸான லுக்கில் மிரட்டுகிறார்.

  காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் நடிகர் பிரஜன். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் பிரஜனுக்கு, வெள்ளித்திரையில் மிகப்பெரிய நடிகராக வரவேண்டும் என்பது ஆசை. ஆனால், அதற்கான வாய்ப்புகள் கிடைக்காததால் முழுமையாக சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். காதலிக்க நேரமில்லை தொடர் அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இதனால் சீரியல்களில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின. பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, அன்புடன் குஷி உள்ளிட்ட சீரியல்களில் பிஸியாக நடித்தார்.

  இதற்கிடையே, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்தேவதை ஆகிய படங்களிலும் நடித்த பிரஜன், சின்னத்தம்பி தொடர் மூலம் பட்டிதொட்டியெல்லாம் ரீச்சானார். சிறந்த நடிப்புக்காக விஜய் டீவியின் விருதுகளையும் பெற்றுள்ளார். ஆனால், அவருக்கு சினிமா ஆசை விடவில்லை. போர் வருது என்ற வெப்சீரிஸ் நடித்த பிரஜன், அதில் ரிப்போர்டர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த சமயத்தில் அவர் நடித்திருந்த பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படம் வெளியானதால், மக்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், நல்ல விமர்சனங்களைப் பெற்று தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும்போது அதிகமானோர் பார்த்து ரசிக்கும் படமாக இருந்து வருகிறது. இது குறித்து பேசிய பிரஜன், மிகவும் மெனக்கெட்டு அந்தப் படத்தில் நடித்திருந்தோம். படமும் சிறப்பாக வந்தது. முன்னாள் முதலமைச்சர் இறந்த நேரத்தில் படம் வெளியானதால், பெரியளவிலான கவனத்தை ஈர்க்கவில்லை. தற்போது சீனு ராமசாமியின் உதவியாளர் தயானந்த் இயக்கிய குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டத்தில் ஹீரோவாக நடித்தார்.

  தற்போது, சிலந்தி திரைப்படத்தை இயக்கிய ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் மதுமிதா, காளி வெங்கட், கேப்ரியல்லா, சினாமிகா உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் பாடல்கள், நிச்சயம் மெஹா ஹிட்டாகும் என இயக்குநர் ஆதிராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.   
  Instagram இல் இந்த இடுகையைக் காண்க

   

  ÃlwaysPrajin🔃 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@prajinpadmanabhan)


  இந்நிலையில், பிரஜன் குறித்த அப்டேட் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. முழுமையாக திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த பிரஜன் என்ன செய்கிறார்? என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவரின் புதுலுக் ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது. கே.ஜி.எப் ஹீரோ யாஷ்போல் முறுக்கு மீசை, தாடி என கம்பீரமாக அந்த லுக்கில் மிரட்டுகிறார். இந்தப் போட்டோவைப் பார்க்கும் ரசிகர்கள், சின்னத்தம்பி தொடரில் நடித்த பிரஜனா இது? என வாய்மேல் விரல் வைக்கின்றனர். அந்தளவுக்கு அவரது புகைப்படம் மாஸாக இருக்கிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: