கேஜிஎஃப் இயக்குநர் - பிரபாஸ் இணையும் 'சலார்' படத்தின் பூஜை - போட்டோஸ்

சலார் பட பூஜை

கே.ஜி.எஃப் இயக்குநருடன் பிரபாஸ் இணையும் படம் பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

  • Share this:
பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் பிரபாஸ், தற்போது ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அடுத்து நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உடன் இணைந்து நடிக்கிறார். இது பிரபாஸின் 21-வது படமாக உருவாக உள்ளது.

இதையடுத்து தன்ஹாஜி பட இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற 3டி படத்தில் பாலிவுட் நடிகர் ஷயீப் அலிகான் உடன் இணைந்து நடிக்கிறார். 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி ஆதிபுருஷ் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் ‘சலார்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. இந்தப் படத்தை கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.



இந்நிலையில் சலார் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றுள்ளது. அதில் கே.ஜி.எஃப் நடிகர் யாஷ் கலந்து கொண்டார்.

இதுவரை பார்க்காத பிரபாஸை ‘சலார்’ படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்றும், நிச்சயம் ரசிகர்கள் அதை ரசிப்பார்கள் என்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூறியுள்ளார். அதேபோல் ‘சலார்’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக பிரபாஸ் கூறியுள்ளார்.



பாகுபலி 2, சாஹோ படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் இந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
Published by:Sheik Hanifah
First published: