• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கவலைக்கிடம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கவலைக்கிடம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

Puneeth Rajkumar

Puneeth Rajkumar

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதி. கவலைக்கிடம் என தகவல்.

  • Share this:
கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாக திகழ்பவர் புனித் ராஜ்குமார். சென்னையில் பிறந்தவரான இவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் தந்தையும் புகழ்பெற்ற நடிகருமான ராஜ்குமார் சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனால் கடத்தப்பட்டு காட்டில் பணைய கைதியாக வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு திடீரென மரடைப்பு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் இன்று காலை 11.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.

கவலைக்கிடம்:

இதனிடையே நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, புனித் ராஜ்குமார் மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருடைய உடல்நிலை மிகவும் ஆபத்தாக இருப்பதாகவும், தற்போதைய நிலையில் எதையும் உறுதியாக சொல்லும் வகையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

புனித் ராஜ்குமார் மருத்துவமனைக்கு அழைத்துவரப்படும்போதே மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், தற்போது அவர் ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாகவும் விக்ரம் மருத்துவமனையின் மருத்துவர் ரங்கநாத் நாயக் தெரிவித்துள்ளார்.

புனித் ராஜ்குமார் கவலைக்கிடமாக இருக்கும் தகவல் அறிந்து ரசிகர்கள், சக திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: