முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / "கிரீன் பவர் ரேஞ்சர்" டாமி ஆலிவராக நடித்த ஜேசன் டேவிட் ஃபிராங்க் மரணம்.!

"கிரீன் பவர் ரேஞ்சர்" டாமி ஆலிவராக நடித்த ஜேசன் டேவிட் ஃபிராங்க் மரணம்.!

பவர் ரேஞ்சர்

பவர் ரேஞ்சர்

ஃபிராங்கின் மேலாளர், ஜஸ்டின் ஹன்ட் அவரது மரண செய்தியை வெளியிட்டார். ஆனால் மரணத்திற்கான காரணத்தையும் அவர் எப்போது இறந்தார் என்றும் கூறவில்லை.

  • Last Updated :
  • Chennai |

90ஸ் கிட்டுகளின் மறையாத நினைவுகளில் ஒன்று பவர் ரேஞ்சர்ஸ் நிகழ்ச்சி. பள்ளிகளில் அந்த பவர் போல் செய்து விளையாடாத ஆட்களே இருக்க மாட்டார்கள். அந்த ​​"மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்" இல் கிரீன் பவர் ரேஞ்சர் டாமி ஆலிவராக நடித்த ஜேசன் டேவிட் ஃபிராங்க் நேற்று காலமானார். அவருக்கு வயது 49.

ஃபிராங்கின் மேலாளர், ஜஸ்டின் ஹன்ட் அவரது மரண செய்தியை வெளியிட்டார். ஆனால் மரணத்திற்கான காரணத்தையும் அவர் எப்போது இறந்தார் என்றும் கூறவில்லை. இவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது

"மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்" இல் ஃபிராங்குடன் இணைந்து நடித்த அசல் பிளாக் பவர் ரேஞ்சர் வால்டர் இம்மானுவேல் ஜோன்ஸ், தன் இன்ஸ்டாகிராமில் "எங்கள் பவர் ரேஞ்சர்ஸ் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினரை இழந்ததற்காக என் இதயம் வருத்தப்படுகிறது" என்று எழுதினார். இதற்கு முன்னர் மஞ்சள் பவர் ரேஞ்சராக நடித்த துய் ட்ராங், 2001 இல் 27 வயதில் கார் விபத்தில் இறந்தார்.

"மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்," எனும் சிறுவர்களுக்கான கதையில் சுமார் ஐந்து இளைஞர்கள் பூமியை தீமையிலிருந்து காப்பாற்றுவதற்காக நியமிக்கப்படுவர். 1993 இல் ஃபாக்ஸில் அறிமுகமாகி ஒரு பாப்-கலாச்சார நிகழ்ச்சியாக இது மாறியது.

முதல் சீசனின் ஆரம்பத்தில், ஃபிராங்கின் டாமி ஆலிவர் முதலில் வில்லனாகக் காணப்பட்டார், தீய ரீட்டா ரெபுல்சாவால் மூளைச்சலவை செய்யப்பட்து குழுவில் கிரீன் ரேஞ்சராக சேர்க்கப்பட்டார் . பின்னர் பவ்ர் ரேஞ்சர்ஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒருவரானார்.

இதையும் படிங்க: ஊடகத் துறையில் சாதிக்க வேண்டுமா? லயோலா கல்லூரியில் கட்டணமில்லா படிப்பு

ஃபிராங்க் பின்னர் வெள்ளை ரேஞ்சராகவும் அணியின் தலைவராகவும் கொண்டு வரப்பட்டார். ஸ்பின்ஆஃப் டிவி தொடர் முழுவதும், ஃபிராங்கின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. ரெட் ஜியோ ரேஞ்சர், ரெட் டர்போ ரேஞ்சர் மற்றும் பிளாக் டினோ ரேஞ்சர் உட்பட பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தார். அதோடு "மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்: தி மூவி" மற்றும் "டர்போ: எ பவர் ரேஞ்சர்ஸ் மூவி" ஆகிய படங்களில் நடித்தார். மேலும் 2017 ஆம் ஆண்டு மறுதொடக்கம் செய்யப்பட்ட "பவர் ரேஞ்சர்ஸ்" இல் ஒரு கேமியோ செய்தார்.

தற்காப்புக் கலைகளின் பயிற்சியாளரான ஃபிராங்க், 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் பல கலப்பு தற்காப்புக் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

top videos

    ஃபிராங்கின் இரண்டாவது மனைவி டாமி ஃபிராங்க் ஆகஸ்ட் மாதம் அவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாகசெய்திகள் தெரிவித்தது. ஃபிராங்கிற்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

    First published:

    Tags: America TV serial, Died