Home /News /entertainment /

Valimai Update | வலிமை பர்ஸ்ட் லுக் மீண்டும் ஒத்திவைப்பு: கவலையில் அஜித் ரசிகர்கள்..

Valimai Update | வலிமை பர்ஸ்ட் லுக் மீண்டும் ஒத்திவைப்பு: கவலையில் அஜித் ரசிகர்கள்..

அஜித்

அஜித்

நடிகர் அஜித் அவர்களின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக மே ஒன்றாம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1ம் தேதி நடிகர் அஜித் அவர்களின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்.

அந்த அறிவிப்பு வெளிவரும் போது கொரோனா நோயின் 2வது அலை வரும் என்றோ, அதன் தாக்கம் சுனாமி போல தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர்.

இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டூடியோஸ், பே வியூ ப்ரொஜெக்ட்ஸ், இப்படத்தில் நடித்து உள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எடுத்து உள்ள முடிவின் படி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் பிரார்த்திப்போம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published:

Tags: Actor Ajith, Valimai

அடுத்த செய்தி