விஜய்யுடன் இருக்கும் இந்த குட்டிப்பாப்பா பிரபல சீரியல் நடிகை என்று சொன்னால் நம்புவீர்களா! வைரல் புகைப்படம்

விஜய்

விஜய் கையில் இருக்கும் அந்த குழந்தை பிரபல சீரியல் நடிகை என்று சொன்னால் நம்ப முடிகிறதா. அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

  • Share this:
சமீப காலமாக, நடிகர் விஜய்யின் விண்டேஜ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. நடிகர் விஜய் தன் மனைவி சங்கீதாவுடன் இருக்கும் புகைப்படங்கள் அனைவராலும் பகிரப்பட்டு வரும் நிலையில், அழகான ஒரு குட்டிப்பாப்பாவை விஜய் தூக்கிக் கொண்டு இருக்கும் ஒரு புகைப்படமும் பகிரப்பட்டு வருகிறது. விஜய் கையில் இருக்கும் அந்த குழந்தை யார் தெரியுமா?

அந்த குட்டிப்பாப்பா ஒரு சீரியல் நடிகை என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? விஜய் கையில் வைத்திருக்கும் அந்த அழகான பெண் குழந்தை இன்று பிரபலமான சீரியலில் நடித்து வரும் இளம் நடிகை. அத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன என்பதை நினைக்கும் போது, ஆச்சரியமாகவே இருக்கிறது.

கலர்ஸ் தமிழ் தொலைக்கட்சியில் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ‘இதயத்தைத் திருடாதே’ சீரியலில் அறிமுகமான கதாநாயகி தான் அந்தக் குழந்தை! அவர் பெயர், ஹிமா பிந்து. கலர்ஸ் தமிழ் ரசிகர்களுக்கு ஹிமா பிந்து மிகவும் பரிச்சயமானவர். இவர் சஹானா என்ற பாத்திரத்தில், நடிகர் நவீன் குமார் ஜோடியாக இந்த சீரியலில் நடித்து வருகிறார். சீரியல் ஒளிபரப்பான சில நாட்களிலேயே, ஹிமா பிந்துவுக்கென தனி ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.



இதயத்தைத் திருடாதே’ முதல் சீரியலாக இருக்கும் போதிலும், பிரபலமான நடிகைகள் பட்டியலில் ‘சஹானா’ ஹிமா பிந்துவும் இடம்பிடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஹிமா பிந்து, ஒரு புகைப்படத்தை நடிகர் விஜய்யின் பிறந்த நாள் அன்று தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்தார். விஜய் ஒரு பெண் குழந்தையை தூக்கி வைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் அது.



விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பட்டியலில், ஹிமாவின் புகைப்படமும் சேர்ந்தது. அந்தக் குழந்தை யாரென்று பலருக்கும் தெரியாத நிலையில், சமீபத்தில் சீரியல் நடிகை ஹிமா பிந்து தான் அந்த குழந்தை என்பது தெரிய வந்ததை அடுத்து, சீரியல் ரசிகர்கள் வட்டாரத்திலும் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.



 




View this post on Instagram





 

A post shared by HB (@himabindhu____)





சீரியலில் நடிப்பதற்கு முன்பு மாடலாக இருந்த இவர், பிறந்து வளர்ந்ததெல்லாம் ஆந்திர மாநிலத்தின் பீமாவரத்தில் தான். கலர்ஸ் தமிழ் மூலம், தொலைக்காட்சி உலகில் அறிமுகமான ஹிமா பிந்து, சில நாட்களிலேயே மக்களின் வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடித்து வரும் இதயத்தைத் திருடாதே என்ற சீரியல் அரசியல் போட்டிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருக்கும் இளம் ஜோடி சிவா மற்றும் சஹானாவின் காதல் கதையாகும். கொரோனா தொற்று ஊரடங்குக் காரணமாக இடையில் சீரியல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் ஒளிபரப்பான உடனே நல்ல வரவேற்பைப் பெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: