இயக்குநர் சுசீந்திரன் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சமூகவலைத்தளங்களோடு பின்னி பிணைந்துள்ளன. அன்றாட வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை பதிவிடுவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பிரச்னைகளையும், அதுகுறித்த தங்களது கருத்துகளையும் சமூகவலைத்தள வாசிகள் பதிவிட்டு வருகின்றனர். இன்றைய நிலையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களும் ஒவ்வொருவருக்கும் ஊடகமாக மாறிவிட்டன.
சாமானியனை விட திரைத்துறை பிரபலங்களுக்கு சமூக வலைத்தளங்களில் அதிக வெளிச்சம் கிடைக்கின்றன. பட விளம்பரங்கள் தொடங்கி தங்களது ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய கருத்துகளையும் சமூகவலைதளங்கள் வாயிலாகவே அவர்கள் கடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் அவ்வப்போது தன்னுடைய கருத்துகளை வெள்ளைத்தாளில் எழுதி ட்விட்டரில் பதிவிட்டு வந்த இயக்குநர் சுசீந்திரன் தற்போது சமூகவலைத்தளங்களை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது பதிவில், அனைவருக்கும் வணக்கம், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய எனது சமூக வலைத்தளங்களில் இருந்து வேலைப்பளு காரணமாக விலகிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவான சாம்பியன் திரைப்படம் டிசம்பர் 13-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.