Sembaruthi serial : செம்பருத்தி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகை விலகல்.! புதிதாக இணைந்த பிரபல நடிகை

செம்பருத்தி சீரியல்

கதைக்களத்தில் ஏற்பட்ட சில சொதப்பல்கள் காரணமாக செம்பருத்தி சீரியல் முன்பை போல ரசிகர்களை கவரவில்லை. இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  • Share this:
    தமிழ் சேனல்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருவது சிறந்த சீரியல்களை ஒளிபரப்பி யார் ரசிகர்களை கவர்ந்திழுப்பது என்தே. அந்த வகையில் முன்னணியில் இருக்கும் பல பிரபல சேனல்கள் சிறந்த கதையம்சம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி தங்களது சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றி வருகின்றன. மூணு போல பெண்கள் மட்டுமே சீரியல்களை பார்க்காமல், அணைத்து வயதினரும் சீரியல்களை ரசித்து பார்த்து வருகின்றனர். எனவே விறுவிறுப்பான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட சீரியல்கள் டிவி சேனல்களை ஆக்கிரமித்து உள்ளன.

    தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் முன்னணியில் இருக்கும் ஒன்று தான் ஜீ தமிழ். இந்த சேனலில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வருகிறது செம்பருத்தி. தமிழ் டிவி சேனல்களில் தமிழ் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் சிறந்த சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி இருந்து வந்த நிலையில், சமீப மாதங்களாக இந்த சீரியல் டல் அடித்து கொண்டிருப்பதாக சின்னத்திரை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கிராமத்தில் இருந்து வந்து பணக்கார வீடு ஒன்றில் வேலைக்கார பெண்ணாக சேர்ந்து பின் அந்த வீட்டிற்கே மருமகளாகும் பெண்ணை சுற்றி நடக்கும் திருப்பங்கள் மற்றும் நிகழ்வுகளை மையமாக கொண்ட இந்த சீரியல் ரசிகர்களை கவர்ந்தது.என்றாலும் சீரியலின் நடிகர் பட்டியலில் நிகழ்ந்த மாற்றங்கள் காரணமாக தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சீரியலில் முதலில் ஹீரோவாக நடித்து வந்தவர் விஜய் டிவி ஆபிஸ் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் நடித்தார். நாயகியாக ஷபானா நடிக்கிறார். இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக காத்திக் சீரியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, யூடியூப் புகழ் விஜே அக்னி ஹீரோவாக்கப்பட்டார். எனினும் கார்த்திக் இடத்தை அக்னி நிர்ப்பத்து, கதைக்களத்தில் ஏற்பட்ட சில சொதப்பல்கள் காரணமாக செம்பருத்தி சீரியல் முன்பை போல ரசிகர்களை கவரவில்லை. இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இதனிடையே கங்கா என்ற முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யாவின் தாயாக நடித்து வந்த மூத்த சீரியல் நடிகை ராணி, செம்பருத்தி சீரியலில் இருந்து விலகி உள்ளார். நடிகை ராணிக்கு பதிலாக அந்த கேரக்டரில் இனி மற்றொரு மூத்த சீரியல் நடிகை உஷா எலிசபெத் நடிக்கிறார்.



    கனா காணும் காலங்கள் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருந்தாலும் சன் டிவி-யில் ஒளிபரப்பான பிரியமானவள் சீரியலில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகை உஷா எலிசபெத். அனுபல்லவி, ஒரு மனிதனின் கதை, கலாட்டா குடும்பம், வாணி ராணி உள்பட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் நவீன சரஸ்வதி சபதம், வென்று வருவான் உள்ளிட்ட சில வெள்ளித்திரை படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: