’ரோஜா’வை சாய்த்த ’பூவே உனக்காக’ - டி.ஆர்.பியில் முதலிடம் பிடித்து அசத்தல்!

ரோஜா-பூவே உனக்காக

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலை டி.ஆர்.பியில் பின்னுக்குத் தள்ளி 'பூவே உனக்காக' சீரியல் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

  • Share this:
விஜய் தொலைக்காட்சி முதல் ஜீ தமிழ் வரை  என தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு தனி மவுசு ரசிகர்களிடம் எப்போதும் உள்ளது. சன் டிவி உள்ளிட்ட பிற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டி.ஆர்.பியில் முதலிடம் பிடிப்பதில் போட்டி நடக்கும். அந்தவகையில் அந்த டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் கடந்த சில மாதங்களாக டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடம் பிடித்து தனி ஆவர்த்தனம் செய்து வந்தது, கதைக்களம் மற்றும் விறுவிறுப்பான காட்சி நகர்வுகளால் அசைக்க முடியாத நிலையில் இருந்த அந்த சீரியலின் டி.ஆர்.பி முதன்முறையாக பூவே உனக்காக சீரியல் அசைத்துள்ளது. பூவே உனக்காக சீரியலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான்.

ரோஜா சீரியலில் கதாநாயகனாக சிபு சூரியனும், அவருக்கு ஜோடியாக பிரியங்காவும் நடித்து வருகின்றனர். வில்லியாக நடித்து வந்த ஷாமிலி குமார் அண்மையில் விலகிய நிலையில், சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய அக்ஷயா அந்தக் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். ஷாமிலி குமார், வில்லி அனு கதாப்பாத்திரத்தில் அனைவரையும் மிரட்டியிருந்தார். தாய்மை அடைந்த அவர் சீரியலை விட்டு விலகியதால் புதிதாக அக்ஷயா இணைந்துள்ளார். அவரும், வில்லி கதாப்பாத்திரத்துக்கு சளைத்தவரல்ல என்ற ரீதியில் முதல் எபிசோடில் இருந்து வில்லத்தனத்தை தொடங்கியுள்ளார்.

Also Read: ஐ.சி.யூ-வில் அப்பா அனுமதி - மருத்துவமனை விரையும் நயன்தாரா

ரசிகர்கள் தங்களின் மேலான ஆதரவை கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒருவேளை வில்லி கதாப்பாத்திரம் மாறியதால் ரோஜா சீரியலின் டி.ஆர்.பி குறைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஷாமிலி குமார் நடித்தபோது இருந்த விறுவிறுப்பு குறைந்த காரணத்தால், இந்த வார ரேட்டிங்கில் மட்டும் பின்தங்கியுள்ளது. ரோஜா சீரியலுக்கு இணையாக விறுவிறுப்புடன் நகர்ந்து வரும் பூவே உனக்காக சீரியல், இந்த வாரம் ஹிட் அடித்து டி.ஆர்.பியில் முதல் இடத்தை பிடித்துள்ளது. லீட் ரோலில் நடித்து வந்த அருண் விலகிய நிலையில், புதிதாக அஸீம் இணைந்தார். அவருடன் மலையாள பிக்பாஸ் ஷோ பிரபலமான ஸ்ரீனிஷூம் இணைந்தார்.

Also Read: 200 எபிசோடுகளை கடந்த ’கண்ணான கண்ணே’ சீரியல் - செட்டில் கொண்டாடிய குழுவினர்..

இதனையடுத்து வேகமெடுத்த கதைக்களம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெறத் தொடங்கியது. ஒட்டு மொத்த சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா முதல் இடத்திலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா 2வது இடத்திலும் இருந்தன. 3வது இடத்தில் இருந்த பூவே உனக்காக சீரியல் இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்கில் திடீரென முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்த தகவலை பூவே உனக்காக சீரியலில் புதிதாக இணைந்த அஸீம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: