Poove unakaga serial : சினிமாவில் கிடைக்காத புகழ் எனக்கு சீரியலில் கிடைச்சது - பூவே உனக்காக சீரியல் நடிகை

ராதிகா ப்ரீத்தி

பூவே உனக்காக சீரியல் மூலம் தனக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததாக ராதிகா ப்ரீத்தி கூறியுள்ளார்.

  • Share this:
ராதிகா ப்ரீத்தி, சின்னத்திரை உலகில் மிகவும் பரிச்சயமான முகம். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில், பூவரசி என்ற பாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ராதிகா ப்ரீத்தி. இந்த சீரியலில் நடித்த பலரும் விலகியுள்ள நிலையில், தொடர்ந்து பூவரசியாக ராதிகா ப்ரீத்தி நடித்து வருகிறார்.

பூவே உனக்காக சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சமீபத்தில், 250 க்கும் மேற்பட்ட எபிசோடுகள் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ராதிகா ப்ரீத்தி, சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு திரைப்படங்களில் நடித்திருப்பதாகவும், அதற்கு முன்பு மாடலிங்கில் பணியாற்றி இருப்பதாகவும், மாடல் ஆவதற்கு முன்பு ஒரு விளையாட்டு வீராங்கனை என்றும் தெரிவித்தார். எந்தத் துறையிலும் கிடைக்காத புகழ், சின்னத்திரை எனக்குக் கொடுத்தது என்றும், தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது என்றும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

பூவே உனக்காக சீரியலில் கதிர் பாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் ஆஸிமுக்கு ஜோடியாக, ராதிகா ப்ரீத்தி நடிக்கிறார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு வரை, ராதிகா ப்ரீத்தி 2 படங்கள் மட்டும் தான் பார்த்திருக்கிறார் என்று தெரிவித்தார். காரணம், இவரின் தந்தை ராணுவ வீரர் என்பதால், கட்டுப்பாடுகள் மிகவும் அதிகம் என்றும் பொழுது போக்கு என்பதற்கு வாய்ப்பே என்றும் கூறினார்.

தான் பார்த்த திரைப்படங்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்றாலும், அப்படங்கள் திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்தை தூண்டியது என்று கூறிய அவர், கல்லூரியில் நடிக்கும் போதே ஃபோட்டோ ஷூட் நடத்தி, சினிமா வாய்ப்பு தேடி இருக்கிறார். அவரின் முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைத்துள்ளது. ஒரு கன்னட திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்த நிலையில், அதன் கம்பெனி மற்றும் படமும் சரி இல்லாததால், அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். பின்பு, மீண்டும் புதிய வாய்ப்புக்காக அலைந்தார் என்று கூறினார்.

Photos : ஆடையில்லாமல் புகைப்படம் வெளியிட்ட அம்மன் சீரியல் நடிகை - ரசிகர்கள் ஷாக்!

வீட்டில் அனைவரும் எதிர்த்த நிலையில், தன்னுடைய முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை ராதிகா ப்ரீத்தி. மாடலிங் செய்ய துவங்கிய இவருக்கு, கன்னடப் படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், அந்த படங்கள் வெற்றி அடையாமல் போனாலும், தமிழில் வாய்ப்பைப் பெற்றது.

ஆனாலும், அவரின் அடையாளம் தெரியாமல் போகவே, இறுதியாக சீரியலில் ஒருமுறை முயற்சி செய்யலாம் என்று முடிவு செய்தார். இது தான் இறுதி முயற்சி, வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், சினிமா மற்றும் சீரியல், இரண்டையும் கைவிட வேண்டும் என்று ராதிகா ப்ரீத்தியின் அம்மா கூறியிருந்தார். ஆனால், பூவரசியாக ராதிகா தேர்வாகி, இன்று சீரியல் வெற்றிநடை போடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: