காதல் திருமணத்தை உறுதி செய்த ‘பூவே பூச்சூடவா’ சீரியல் பிரபலங்கள்

மதன் பாண்டியன் - ரேஷ்மா ஜோடி

பூவே பூச்சூடவா சீரியல் பிரபலங்கள் தங்களது காதல் திருமணத்தை உறுதி செய்துள்ளனர்.

  • Share this:
கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பூவே பூச்சூடவா. இத்தொடரில் ரேஷ்மா முரளிதரன், கார்த்திக் வாசுதேவன், தினேஷ் கோபால்சாமி, மதன் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் ரேஷ்மா, மதன் பாண்டியன் இருவரும் புத்தாண்டு தினத்தில் தங்கள் காதல் திருமணத்தை உறுதி செய்துள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மதன் பாண்டியன், “இந்த ஆண்டு எங்களுக்கு ஸ்பெஷலானது. எனக்கு ஸ்பெஷலானவர் என்றென்ன்றும் என்னவளாகிறார். புத்தாண்டில் இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆம் நாங்கள் திருமண பந்தத்தில் இணைய உள்ளோம் உங்கள் அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக புத்தாண்டு பிறந்த அந்த நிமிடத்தில் திருமண செய்தியை அறிவித்தோம்” என்று கூறியுள்ளார். ரேஷ்மா முரளிதரனும் தன்னுடைய பெயருக்கு பின்னால் தனது கணவரின் பெயரை பதிவிட இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த ஜோடிக்கு சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
‘பூவே பூச்சூடவா’ தொடரில் ரேஷ்மா சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதன் பாண்டியன் சுந்தர் எனற கேரக்டரில் நடித்துள்ளார். விரைவில் இவர்களது திருமண தேதி அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: