விஜய்யுடன் ஹேட்ரிக் அடிக்கும் பூவையார்... தளபதி 65-லும் நடிக்கிறாரா?

விஜய்யுடன் ஹேட்ரிக் அடிக்கும் பூவையார்... தளபதி 65-லும் நடிக்கிறாரா?

விஜய் - பூவையார்

பிகில், மாஸ்டரைத் தொடர்ந்து விஜய்யின் 65-வது படத்திலும் பூவையார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6-ல் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பூவையார். கானா பாடல்களை தனக்கே உரிய ஸ்டைலில் பாடி அசத்தும் இவருக்கு ரசிகர்களும் ஏராளம்.

பிகில் படத்தில் வெறித்தனம் பாடலை விஜய்யுடன் பாடி அசத்திய பூவையார் அந்தப் படத்திலும் நடித்திருந்தார். அந்தப் பாடலில் அவர் சொல்லும் என் தளபதி தான் தூளு என்ற வார்த்தை பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி பூவையாரின் ரசிகர் என்று தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு முறை பதிவிட்டிருந்தார். இந்நிலையில் பிகில், மாஸ்டர் படங்களைத் தொடர்ந்து விஜய்யின் 65-வது படத்திலும் பூவையார் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக பூவையார் விஜய்யுடன் நடிக்க இருக்கிறார். விஜய் - பூவையார் கூட்டணியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் படிக்க: நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம் - திரையுலகினர் அஞ்சலி

விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் படக்குழு அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
Published by:Sheik Hanifah
First published: