Home /News /entertainment /

மாஸ்டர் பார்க்க வந்த ஏழை பாட்டிக்கு தியேட்டரில் கிடைத்த இன்ப அதிர்ச்சி

மாஸ்டர் பார்க்க வந்த ஏழை பாட்டிக்கு தியேட்டரில் கிடைத்த இன்ப அதிர்ச்சி

மாஸ்டர்

மாஸ்டர்

தான் சேர்த்து வைத்திருந்த பணத்துடன் மாஸ்டர் திரைப்படம் பார்க்க வந்த ஏழை பெண்ணுக்கு திரையரங்கு ஊழியர் இன்ப அதிர்ச்சி தந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி திரைக்கு வந்த படம் ‘மாஸ்டர்’. ஏற்கெனவே அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்திருந்த நிலையில் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.

முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.40 கோடி வசூல் ஈட்டிய மாஸ்டர் படம் தற்போது உலகளவில் மூன்றே நாட்களில் 100 கோடி வசூல் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் விஜய்யின் கேரியரில் எட்டாவது ரூ.100 கோடி படம் எனும் சிறப்பையும் மாஸ்டர் அடைந்துள்ளது.

ஏற்கனவே துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார், பிகில் என விஜய்யின் ஏழு படங்கள் ரூ.100 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ள நிலையில் தற்போது மாஸ்டர் படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் பார்க்க தனது மாற்றுத்திறனாளி மகனுடன் தியேட்டருக்கு வந்த ஏழை பாட்டிஒருவர் ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரைக் காசுகளுடன் தனக்கான டிக்கெட்டை கேட்கிறார். அவரிடம் விசாரிக்கும் திரையரங்கு ஊழியர் உங்களுக்கு விஜய்யை பிடிக்குமா என்று கேட்க, அந்தப் பாட்டியும் ஆமாம் என்கிறார்.

உடனே இந்தப் பணம் வேண்டாம் என்று கூறும் திரையரங்க ஊழியர் தியேட்டருக்குள் போய் படம் பார்க்குமாறு கூறுகிறார். இதை எதிர்பார்க்காத அந்த பாட்டி இன்ப அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.



தமிழகத்தில் மூன்று நாட்களில் 55 கோடி வரை வசூல் செய்திருக்கும் மாஸ்டர் படம் அடுத்தபடியாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தற்போதே அங்கு பல ஏரியாக்களில் லாபம் பார்த்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor vijay, Kollywood, Master

அடுத்த செய்தி