• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகை பூனம் பாண்டேவின் கணவர் சாம் பாம்பே கைது!

நடிகை பூனம் பாண்டேவின் கணவர் சாம் பாம்பே கைது!

பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவின் கணவரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

  • Share this:
    சமூக வலைதளங்களில் சர்ச்சைகளுக்கு பெயர்போன நடிகை பூனம் பாண்டே, மும்பை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தமது கணவர் படப்பிடிப்பு தளத்தில் தன்னை அடித்து துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

    இதனைதொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பூனம் பாண்டேவின் கணவரான சாம் பாம்பேவை கைது செய்தனர். தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் பூனம் பாண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டும் இதேபோல, சாம் பாம்பே கைது செய்யப்பட்டார்.

    பூனம் பாண்டேயின் கணவர் சாம் பாம்பே இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எடிட்டரும் ஆவார். சாம் பாம்பே மீது பூனம் பாண்டே புகார் கொடுப்பது இது முதல் முறையல்ல. 2020ம் ஆண்டில், இந்த தம்பதியினரின் திருமணம் முடிந்த இரண்டு வாரத்தில், பூனம் பாண்டே, கணவர் தன்னைத் தாக்கி, துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, சாம் பாம்பே உடனான தனது திருமண உறவை முடித்துகொள்ள நினைத்தார். இதனால், ஏற்கனவே மனைவியை துன்புறுத்தியதற்காக சாம்பாம்பேவை போலீசார் கோவாவில் கைது செய்தனர்.

    இதுதொடர்பாக பூனம் பாண்டே கூறும்போது, தனது உறவு எப்போதுமே துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வருவதாகவும், தன்னை ஒரு மிருகத்தைப் போல அடித்து துன்புறுத்தும் நபருடன் உறவை தொடர்வது நல்லதல்ல என்றும் கூறியிருந்தார்.

    இந்நிலையில், தற்போது கணவரால் மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார் பூனம் பாண்டே. தொடர்ந்து, தலை, கண் மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் பூனம் பாண்டே தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: