Pooja Hedge: ஆக்ஸிமீட்டரை எவ்வாறு பயன்படுத்துவது? நடிகை பூஜா ஹெக்டே விளக்கம்!

நடிகை பூஜா ஹெக்டே

ஆக்ஸிமீட்டர் பயன்பாடு குறித்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களால் கற்பிக்கப்பட்டதாக பூஜா குறிப்பிட்டுள்ளார்

  • Share this:
பூஜா ஹெக்டே 2010ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவாவுடன் முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  பின்னர் "ஒக்க லைலா கோசம்" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். ஒக்க லைலா கோசம் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு "மோஹன்ஜோ தாரோ" என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததையடுத்து ஹிந்தி திரையுலகிலும் அறிமுகம் ஆனார்.

தமிழ் சினிமா பெரிய அளவு வரவேற்பை கொடுக்கவில்லை என்றாலும், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகம் பூஜா ஹெக்டேவிற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த நிலையில் தற்போது தமிழில் மீண்டும் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தின் சில காட்சிகள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டு வந்த நிலையில், பூஜா ஹெக்டே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். சில நாட்கள் தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மீண்டு வந்துள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே


இந்நிலையில் பூஜா ஹெக்டே, தனது  ட்விட்டர்  பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பல்ஸ் ஆக்ஸிமீட்டரைப் பயன்படுத்துவது  எப்படி என்ற தகவலை ஷேர் செய்துள்ளார்.
அந்த வீடியோவில் முதலில் உங்கள் கைகளை நன்கு சுத்தப்படுத்திய பின்னர் ஒரு 5 நிமிடங்களுக்கு பிறகு நடு விரலில், ஆக்ஸிமீட்டரை பொறுத்த வேண்டும். இப்போது அந்த விரலை உங்கள் இதயத்தின் அருகே கொண்டு சென்று சில நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து விட்டு பின்னர் ஆக்ஸிமீட்டரை எடுத்து பார்க்க வேண்டும். அதில் இருக்கும் அதிகபட்ச எண்ணிக்கையை கணக்கிட வேண்டும் என கூறியுள்ளார். இது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களால் கற்பிக்கப்பட்டதாக பூஜா குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், இது உங்களுக்கு மிகவும் உதவும் என்று நம்புகிறேன்.  நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்த போது, ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்க இது பெரும் உதவியாக இருந்தது என்று பூஜா ஹெக்டே குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. முதல் அலையை விட தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனால் திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள், மருத்துவர்கள் என ஏராளமானோர் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

பல்வேறு திரையுலகினர் மிகவும் இக்கட்டான இந்த காலகட்டத்தில் தேவையான விழிப்புணர்வை பரப்புவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். முன்னதாக மாளவிகா மோகன், நடிகர் கார்த்தி மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பலரும் மருத்துவ நிபுணர்களிடமிருந்து வைரஸ் மற்றும் தடுப்பூசி குறித்து பல முக்கியமான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெற்று வீடியோக்களில் கூறி வருகின்றனர்.
Published by:Arun
First published: