Ponniyin Selvan : புதுச்சேரியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்..

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைப்பெற்று வருகிறது.

  • Share this:
    பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதையடுத்து புதுச்சேரியில் படப்பிடிப்பை தொடங்குகிறார் மணிரத்னம்.

    அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இரு பாகங்களாக மணிரத்னம் இயக்குகிறார். இதன் முதல் பாகம் அடுத்தாண்டு கோடையில் வெளியாகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, பார்த்திபன், ஜெயசித்ரா, விஜய் யேசுதாஸ், லால், நாசர், கிஷோர், பாலாஜி சக்திவேல் உள்பட ஏராளமானோர் நடிக்கின்றனர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு. தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார்

    பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை மணிரத்னம் புதுச்சேரியில் தொடங்குகிறார். இரண்டு வாரங்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில் படப்பிடிப்பு நடக்கயிருக்கிறது. இது நீண்ட ஷெட்யூல்டாக இருக்கும். அத்துடன் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டாக்கி போர்ஷன் நிறைவுறும் என கூறப்படுகிறது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: