ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரித்திருந்த பொன்மகள் வந்தால் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாக உள்ளது.
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ஏப்ரல் மாத இறுதியில் திரைக்கு வர தயாராகி வந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையே, பொன்மகள் வந்தாள் படத்தை திரையரங்க ரிலீஸுக்கு முன்பே நேரடியாக ஆன்லைன் OTT தளத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். அமேசான் பிரைம் நிறுவனம் இதன் உரிமையை ரூ.9 கோடி கொடுத்து கைப்பற்றி இருப்பதாகவும் இதன் மூலம் தயாரிப்பு தரப்பு லாபம் பார்த்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
எனினும், இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சூரியா, ஜோதிகா ஆகியோரின் படங்களை திரையிட மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும், சூர்யாவின் முடிவுக்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆதரவு இருந்தது.
திரையரங்குகள் இன்னமும் திறக்கப்படாத சூழலி, அமேசான் பிரைம் தளத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வரும் 29-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.