• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரொமான்ஸில் பிரபுதேவா - நிவேதா பெத்துராஜ்... உதிரா உதிரா பாடல் வீடியோ!

ரொமான்ஸில் பிரபுதேவா - நிவேதா பெத்துராஜ்... உதிரா உதிரா பாடல் வீடியோ!

பொன் மாணிக்கவேல் பட போஸ்டர்

பொன் மாணிக்கவேல் பட போஸ்டர்

  • News18
  • Last Updated :
  • Share this:
பொன் மாணிக்கவேல் படத்தில் இடம்பெற்றுள்ள உதிரா உதிரா பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சார்லி சாப்ளின் 2 படத்தை அடுத்து பிரபுதேவா நடித்துள்ள படம் பொன் மாணிக்கவேல். இந்தப் படத்தை முகில் செல்லப்பன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரபுதேவா. அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் தற்போது படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். உதிரா உதிரா என்று தொடங்கும் இந்தப் பாடலை பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் மற்றும் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடியுள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்தப் பாடல் பிரபு தேவா - நிவேதா பெத்துராஜ் இடையே வரும் ரொமான்டிக் பாடலாக அமைந்துள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் புரமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: