• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: பா.ரஞ்சித், சத்யராஜ் கருத்து

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: பா.ரஞ்சித், சத்யராஜ் கருத்து

சத்யராஜ், பா.ரஞ்சித்

சத்யராஜ், பா.ரஞ்சித்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்

 • News18
 • Last Updated :
 • Share this:
  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் சத்யராஜ் ஆகியோர் கருத்து கூறியுள்ளனர்.

  சமூக வலைதளங்களின் வாயிலாக பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ளது. அதில், பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

  அதனையடுத்து, இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, காவல்துறை நான்கு பேரை கைது செய்தது. இந்தநிலையில், அந்தக் கும்பல் இளம்பெண்களை சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்யும் ஓரிரு நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ வெளியானது. அந்த வீடியோ தமிழ்நாட்டையே கொந்தளிக்கச் செய்தது.

  இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜான், வசந்தகுமார் ஆகிய 4 பேர் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களது ஜாமின் ரத்து செய்யப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

  இந்நிலையில் இதுகுறித்து அரசியல் பிரபலங்கள் தொடங்கி, திரைத்துறையினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம். இந்த மனித மிருகங்களைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்களுக்கு சட்டப்படி உச்சபட்ச தண்டனையை தாமதமின்றி வழங்கவேண்டும்.

  பள்ளியிலேயே அடிப்படைக் கல்வியாக மனநல மருத்துவம் தொடர்பான கல்வியை கற்பிக்க வேண்டும். இவர்களைப் போன்ற மனபிறழ்வு உள்ளவர்களுக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சட்டப்படி உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்பதை மனவலியுடன் கூறிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

  இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பதிவில், “பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும், பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நம் அனைவருக்கும். நம் பாவம், பரிதவிப்பால், பிரச்னை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.

  ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூக செயல்பாடு, கலாச்சாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி, நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும். இல்லையேல் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படப்போகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும், அதிகாரம் விழுங்கி கொண்டுதான் இருக்கும். நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய்க் கொண்டுதான் இருக்கப் போகிறோம்” என்று கூறியுள்ளார்.

  பொள்ளாச்சி கொடூரம் - பின்னணியில் யார், யார் மறைக்கப்படுகிறார்கள் - வீடியோ

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sheik Hanifah
  First published: