பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் கட்டுகோப்பாக வளர்க்க வேண்டும் என்று நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களின் வாயிலாக பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார், திருநாவுக்கரசு ஆகிய 4 பேரை கைது காவல்துறையினர் செய்தனர். பின்னர் அவர்கள் மீது குண்டர்சட்டம் பாய்ந்தது.
நேற்று, இந்தக் கும்பல் இளம் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்யும் ஓரிரு நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ வெளியானது. அந்த வீடியோ தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நீதி கேட்டு, பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இன்று காலையில் தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன் வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு சில மணி நேரங்களிலேயே சி.பி.ஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தவிவகாரம் குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு நடிகை ராதிகா சரத்குமார் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில், “பொள்ளாச்சி சம்பவம் மிகவும் கொடூரமானது. இதைத் தடுக்க முடியவில்லையே என்ற இயலாமையும் கோபமும் வருகிறது.
ஆண்கள் மட்டும் தான் சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டுமா பெண்கள் பயன்படுத்தக்கூடாதா என எனக்கு தெரியவில்லை. நல்லது கெட்டது என எல்லா இடத்திலும் உண்டு. எங்கு எப்படி நடக்கவேண்டும் என்று பெண்களும் ஆண்களும் தெரிந்துகொள்ள வேண்டும். கட்டுக்கோப்பாக பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் வளர்க்க வேண்டியது அவசியம். இன்றைய சூழலில் பெண்கள் ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள் ஆனால் இன்னும் விழிப்புணர்வுடன் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும். நாளுக்கு நாள் வேகமாக சமுதாயம் மாறிக்கொண்டிருக்கிறது. மனித எண்ணங்களும் மாறிக்கொண்டிருக்கிறது.
பொள்ளாச்சி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அதிகபட்ச தண்டனையை இழுத்தடிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும். ஆண்களும் பெண்களும் சமூக வலைதளங்களில் கவனமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அன்புமணிக்கு எதிராக ஓவியா போட்டி! வலைதளங்களில் வைரலாகும் மீம்ஸ் - வீடியோ
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.