• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை - காவல்துறை அறிவிப்பு!

நடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை - காவல்துறை அறிவிப்பு!

நிவேதா பெத்துராஜ்

நிவேதா பெத்துராஜ்

செல்போன் கொண்டு செல்வதற்கான நீதிமன்ற தடை அமலில் இருக்கும் நிலையில் நடிகை என்பதால் நிவேதிதாவிற்கு மட்டும் சலுகை காட்டப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போனை எடுத்துச் சென்ற நடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.

    பாதுகாப்பு நடவடிக்கையாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்போனை எடுத்துச் செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வரக்கூடிய பக்தர்கள் தங்களுடைய செல்போனை பாதுகாப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.10 கட்டணத்தில் செல்போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.

    Read Also... அஜித்தையும் விட்டுவைக்காத ஸ்ரீரெட்டி... ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்ல

    அப்போது அவர் பொற்றாமரைக்குலத்தில் அமர்ந்து போட்டோக்களும், கோவில் உள்ளே உள்ள வளையல் கடையில் ஷாப்பிங் செய்த வீடியோக்களையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    செல்போன் கொண்டு செல்வதற்கான நீதிமன்ற தடை அமலில் இருக்கும் நிலையில் நடிகை என்பதால் நிவேதிதாவிற்கு மட்டும் சலுகை காட்டப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    நிவேதா பெத்துராஜின் பேஸ்புக் பதிவிலேயே ரசிகர்கள் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஆனால் நிவேதா பெத்துராஜ் தரப்பில் எந்தவித விளக்கமும் இல்லை.

    இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போனை எடுத்துச் சென்ற நடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.

    Also see...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: