எனக்கென்று தனியாக பாதுகாப்பு வேண்டாம் - நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் அதிகாரியிடம் ரஜினிகாந்த் கோரிக்கை

ரஜினிகாந்த்

  • News18
  • Last Updated :
  • Share this:
காவல்துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று சந்தித்து பேசியுள்ளார்.

துக்ளக் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பிறகு ரஜினிகாந்த் வீட்டிற்கு தொடர்ச்சியாக பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காவல்துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று சந்தித்து பாதுகாப்பு தொடர்பாக ஆலோசித்துள்ளார்.

அப்போது, தனக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை திரும்பபெற்றுக்கொள்ளும் படி ரஜினிகாந்த் கேட்டுகொண்டதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது வீட்டுக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பையும் திரும்பப் பெற ரஜினிகாந்த் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், குறித்து காவல் துறை இயக்குனரிடன் கலந்தாலோசித்து முடிவு செய்யவுள்ளதா காவல்துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு ரஜினிகாந்திடம் கூறியதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Sankar
First published: