Home /News /entertainment /

ரவுடிகளைப் போல் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் - போலீசார் வழக்குப் பதிவு

ரவுடிகளைப் போல் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் - போலீசார் வழக்குப் பதிவு

துனியா விஜய் பிறந்தநாள் விழா

துனியா விஜய் பிறந்தநாள் விழா

வாளைப் பயன்படுத்தி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கன்னட திரையுலகில் நடிகராக வலம் வருபவர் துனியா விஜய். கடந்த 19-ம் தேதி நள்ளிரவில் தனது பிறந்தநாளையொட்டி கிரிநகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டிருந்தன. அதில் நடிகர் துனியா விஜய் வாளைப் பயன்படுத்தி பிறந்தநாள் கேக்கை வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதேவேளையில் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு அனுமதி பெறாமல் அப்பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு ரசிகர்கள் கூடியதால் அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக துனியாவிஜய் மீது போலீஸ் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டிருந்தது.

இந்தவிவகாரத்தில் பிறந்தநாள் கேக்கை வெட்ட ஏன் வாளை பயன்படுத்தினீர்கள் என்று விளக்கம் கேட்டு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதையடுத்து அவர் கிரிநகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி துனியா விஜய் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், வாளை பயன்படுத்தி கேக் வெட்டிய விவகாரத்திலும் அவர் மீது கிரிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க: விஜய்யின் பிகிலை ஓரங்கட்டிய அஜித்தின் விஸ்வாசம் - புதிய ரிப்போர்ட்
Published by:Sheik Hanifah
First published:

அடுத்த செய்தி