Kareena Kapoor : கர்ப்பகால அனுபவங்களை புத்தகமாக வெளியிட்ட நடிகை கரீனா கபூர் மீது போலீஸில் புகார்

கரீனா கபூர்

நடிகை கரீனா கபூர் தனது கர்ப்பகால அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தின் பெயர் கிறிஸ்தவர்களின் மத உணர்வை கொச்சைப்படுத்துவதாக அவர் மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

  • Share this:
    கரீனா கபூர் நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்து, அவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். குழந்தை வளர்ப்பு காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த கரீனா கபூர் தனது கர்ப்பகால அனுபவங்களை பிரக்னன்ஸி பைபிள் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார்.

    பைபிள் என்பது கிறிஸ்தவர்களின் புனித நூல். அதனை தனது புத்தகத்துக்கு வைத்து கிறிஸ்தவர்கள் மத உணர்வை புண்படுத்திவிட்டார் என போலீசில் கரீனா கபூர் மற்றும் புத்தகத்தின் உதவி ஆசிரியர், புத்தகத்தை வெளியிட்ட நிறுவனம் என அனைவர் மீதும் புகார் தரப்பட்டுள்ளது

    மும்பையைச் சேர்ந்த ஆல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகாசங்கத்தின் சார்பில் இந்தப் புகார் தரப்பட்டுள்ளது. புத்தகத்தின் பெயரில் இடம்பெற்றுள்ள பைபிளை நீக்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை.

    Photos :நடிகை ஸ்ரீதேவி மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்..

    தனது பிரக்னன்ஸி பைபிள் புத்தகத்தை தனது மூன்றாவது குழந்தை என அழைத்துவரும் கரீனா கபூர் புத்தகத்தின் பெயரை இன்னும் மாற்றவில்லை. அதேநேரம், போலீசாரும் வழக்குப் பதிவு செய்யாமல் புகாரை மட்டும் வாங்கி வைத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: