• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உழவர்களின் அடிமடியில் கைவைக்க வேண்டாம்... வைரமுத்து எச்சரிக்கை!

உழவர்களின் அடிமடியில் கைவைக்க வேண்டாம்... வைரமுத்து எச்சரிக்கை!

கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்துவும் தனது எதிர்ப்பை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நீக்கி, ஊறு செய்ய வேண்டாம் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.

    விவசாயிகளுக்கு வழங்கிவரும் இலவச மின்சாரத்தை நிறுத்தி, அதற்கு பதிலாக நேரடியாக வங்கிகளில் பணம் செலுத்தும் முறையை கடைபிடிக்கவேண்டும் என்று மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.



    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதேபோல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்துவும் தனது எதிர்ப்பை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    உரிமை மின்சாரத்தை நீக்கி, உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம் எனவும், உழவர்களின் அடிமடியில் கை வைத்தால், அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும் என வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: