Home /News /entertainment /

67வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் தமிழ் சினிமாவின் கவிப்பேரரசு

67வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் தமிழ் சினிமாவின் கவிப்பேரரசு

வைரமுத்து.

வைரமுத்து.

இன்றுடன் 67-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் தமிழ் சினிமாவின் கவிப்பேரரசு வைரமுத்து.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தமிழ் சினிமாவின் பாடல்களில் தமிழ் வார்த்தைகளை வைரங்களாகவும், முத்துக்களாகவும் கொட்டியவர் வைரமுத்து. இவரது வார்த்தை ஜாலங்களால் சாமானிய இளைஞன் முதல் சிங்கப்பூர் அதிபர் வரை வசீகரிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

    ஐந்தாம் வகுப்பு முதலே தமிழ் மீது தீராக் காதல் கொண்ட வைரமுத்து பச்சையப்பா கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் பொழுதே தான் ஒரு பாடலாசிரியர் என்பதை முடிவு செய்துவிட்டார். 1980ம் ஆண்டு பாராதிராஜா இயக்கிய நிழல்கள் படத்துக்காக தன்னுடைய முதல் திரைப் பாடலை எழுதினார் வைரமுத்து.

    ஆரம்பத்தில் வைரமுத்துவை பார்த்ததும் இளையராஜாவுக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை. சிக்கலான மெட்டை கொடுத்துவிட்டு நாளை வரும்படி சொல்லியிருக்கிறார். மெட்டை கொடுத்த வேகத்தில் வைரமுத்து பல்லவியை கொட்ட, இளையராஜாவும் பாராதிராஜாவும் மெய்சிலிர்த்துப் பாராட்டியிருக்கிறார்கள். அப்படி உருவான பாடல்தான் தமிழ் திரையிசையில் புது அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த 'இதுவொரு பொன்மாலை பொழுது'.

    தமிழ் பாடல்களில் கண்ணதாசனுக்குப் பிறகு இலக்கிய நயம் குறைந்து வருவதாக விமர்சனங்கள் வந்தபோது, வைரமுத்து எழுதிய இளைய நிலா பொழிகிறது பாடல் தமிழ் இலக்கிய கவிதைகளுக்கு நெருக்கமான ஒன்றாகக் கொண்டாடப்பட்டது.

    வைரமுத்துவின் வரிகள் பல காரணங்களுக்காகக் கொண்டாடப்பட்டாலும் வைரமுத்து அளவிற்கு தமிழ் சினிமாவில் கிராமியத்தை வார்த்தைகளால் வடித்த கவிஞர்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    Also see:

     

    கிராமிய மணம் கமழும் பாடல்கள் வடித்தாலும் அறிவியலும் ஆங்காங்கே வைரமுத்துவின் பாடல்களில் வினைபுரிவது அவரின் தனிச்சிறப்பு. 'அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்' என எண்ணற்ற அறிவியல் தகவல்களை தன் பாடல்கள் மூலம் இளைய தலைமுறைக்கு எளிதாய்க் கடத்தியிருக்கிறார் வைரமுத்து.

    வைரமுத்து எழுதிய தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல் சிங்கப்பூர் அதிபராயிருந்த எஸ்.ஆர்.நாதனுக்கு மிகவும் பிடித்த பாடல். அவர் மறைவின்போது உலகத் தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடியிருந்த அரங்கில் அந்தப் பாடலை முழுதும் ஒலிபரப்பி அஞ்சலி செய்தது சிங்கப்பூர் அரசாங்கம்.

    ஏ.ஆர். ரகுமானின் திரைப்படங்களில் ஏறத்தாழ 85 சதவீதத்திற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள வைரமுத்து ரஹ்மானின் வெற்றிகரமான பயணத்திற்குப் பின்னால் முக்கியமான ஒருவராக தோள் நிற்கிறார்.

    48 ஆண்டுகள் இலக்கியப் பயணம், 40 ஆண்டுகள் திரைப்பயணம், பத்மபூஷண் - பத்மஸ்ரீ - சாகித்ய அகாடமி விருதுகள், திரைப்பாட்டுக்கென 7 தேசிய விருதுகள் பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் என்ற கவுரவம், மூன்று பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள், 38 நூல்கள், 7500 பாடல்கள் என விரியும் வைரமுத்துவின் புகழ் தமிழ் போல என்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
    Published by:Rizwan
    First published:

    Tags: Poet vairamuththu

    அடுத்த செய்தி