• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • பாடல் வரிகளில் உலகை அளந்தவன்: என்றும் இளைஞன் - வாலியின் 8-வது ஆண்டு நினைவு தினம்

பாடல் வரிகளில் உலகை அளந்தவன்: என்றும் இளைஞன் - வாலியின் 8-வது ஆண்டு நினைவு தினம்

வாலி

வாலி

கவிஞர் வாலியின் 8 ஆவது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அந்த வாலிப கவிஞனின் திரைப் பயணம் எத்தனை சாகசங்கள் நிறைந்தது என்று தெரிந்துகொள்வோம்.

 • Share this:
  வாழும் காலம் எல்லாம் பாடல் வரிகளுக்குள் வார்த்தை ஜாலம் நிகழ்த்தியவர் வாலி. புதிய வார்த்தைகளை தேடி பிடிக்க நாடு நாடாக தன் அறிவினை பயணப்பட செய்து வாழ்வின் இறுதி நாள் வரை தன் பாடல்களை வித்தியாசமான வார்த்தைகளாக தனித்துவத்துடன் திகழச் செய்தது இவரது பெரும் சிறப்பு. காதல் ததும்பும் இந்த வரிகளை எழுதியபோது வாலிக்கு 76 வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். தான் எழுதும் ஒவ்வொரு வரிகளிலும் எழுத்துக்களின் இளமையை அதிகரித்துக் கொண்டே சென்ற பாடலாசிரியர் வாலி.

  வரிகளுக்குள் பல புதுமை செய்தவர். வாலி என்றால் முக்காலா முக்காபுலா, மாரோ, மாரோ பாய்ஸே டுமாரோ போன்ற புரியாத வார்த்தைகளை தமிழ்சி னிமாவில் தோற்றுவித்த ஒரு குறும்பு கவிஞரும் வாலி தான். வாலியின் வரிகளில் ததும்பும் குறும்பு அவரின் வயதை யாரும் சிந்திக்கவே முடியாத அளவு ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தது. 1958ம் ஆண்டு அழகர்மலை கள்வன் திரைப்படத்தின் நிலவும் தாரையும் நீயம்மா என்ற முதலில் எழுதிய அவரது பேனா 2013ம் ஆண்டு அவரின் கடைசி மூச்சு வரை 15 ஆயிரம் பாடல்களை எழுதிவிட்டு தான் தமிழ் சினிமாவின் ஓய்ந்தது. கண்ணதாசனுக்கு நிகரான கவிஞர் உருவாக முடியுமா என்ற கேள்வி எழுந்தபோது இதோ நான் இருக்கிறேன் என எழுதித் தள்ளினார் வாலி. எம்ஜிஆரின் ஆஸ்தான கவிஞராக மாறிய வாலி, எம்ஜிஆர் புகழ்பாடும் பாடல்களை தமிழ் சினிமாவிற்கு வாரி வழங்கினார்.

  திரையுலகில் எம்ஜிஆரின் புகழ் உயர வாலியின் பங்கு முக்கியமானது. நான் ஆணையிட்டால் உள்ளிட்ட மிகச்சிறந்த பாடல்களை எம்.ஜி.ஆருக்கு எழுதியுள்ளார். எம்ஜிஆரின் திரைவாழ்க்கையில் மட்டுமின்றி அரசியல் மேடைகளிலும் அவருக்காக துணை நின்றார் வாலி. அதிமுக மேடைகளை வாலி அலங்கரிக்க அவருக்கு எதிராக காங்கிரஸ் மேடைகளில் கண்ணதாசன் முழங்கினார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் என தலைமுறைகளைத் தாண்டியும் வாலியால் எந்த தலைமுறை இசையமைப்பாளர்களுடனும் ஒத்துப் போகும் அளவிற்கு தனது மனதை இளமையாக வைத்திருந்தார். அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எதிர்நீச்சல் திரைப்படத்திற்காக ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு காட்டி போடா நீ என்ற பாடல் வாலியில் இளமைக்கு ஒரு உதாரணம்.

  ஏறத்தாழ 65 ஆண்டுகளாக நிற்காமல் எழுதிக்கொண்டிருந்த வாலியின் பேனா திரைப்பாடல்களை தாண்டி, வசனகர்த்தாவாகவும், இலக்கிய உலகில் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் வாலியை பயணிக்க வைத்துக் கொண்டே இருந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  காதல் வைரஸ், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகராகும் நடித்துள்ள வாலி வயதிற்கும் சுறுசுறுப்பிற்கும் தொடர்பு இல்லை என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வாலியின் உயிர் இம்மண்ணை விட்டு மறைந்து விட்டாலும் அவர் வடித்து வைத்த வார்த்தைகள் இன்னமும் ரசிகர்கள் மனதை வருடிக் கொண்டே இருக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Karthick S
  First published: