• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’பிஎம் நரேந்திர மோடி’ படத்தைக் காண ஆசை - காஜல் அகர்வால்

’பிஎம் நரேந்திர மோடி’ படத்தைக் காண ஆசை - காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

  • News18
  • Last Updated :
  • Share this:
    ‘பிஎம் நரேந்திரமோடி’ படத்தைக் காண ஆவலாக உள்ளேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பிஎம் நரேந்திர மோடி’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஓமங் குமார் இயக்கியுள்ளார். நரேந்திரமோடி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். நரேந்திர மோடிக்கு அமித் ஷா மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவரது கதாபாத்திரமும் படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அமித் ஷா கதாபாத்திரத்தில் நடிகர் மனோஜ் ஜோஷி நடித்துள்ளார்.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 7-ம் தேதியன்று வெளியான நிலையில் ஏப்ரல் 11-ம் தேதி படத்தை வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் அறிக்கை வெளியிட்டிருந்தார். மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடைபெறுவதற்கு முன் இந்தத் திரைப்படம் திரைக்கு வந்தால் அது தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

    மேலும் இந்த சூழலில் பி.எம்.நரேந்திரமோடி திரைப்படத்தை வெளியிடுவது மக்களை திசைதிருப்பும் நடவடிக்கையாகும் இதனால் படத்தை வெளியிடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தேர்தல் நடைபெறும் நாளில் திரைப்படம் வெளியாவதாக மனுதாரர் தரப்பில் கூறப்படுவதால் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்தில் முறையிடுமாறு அறிவுறுத்தியிருந்தது.



    இதையடுத்து இந்தப் படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில், எந்த அரசியல் கட்சி அல்லது தனிப்பட்ட நபர்களை ஊக்குவிக்க உதவும் எந்தவொரு திரைப்படமும் மின்னணு ஊடகங்களில் காண்பிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    படிக்க: தேர்தலில் தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்த சமந்தா!

    இந்நிலையில் படத்தின் நாயகன் விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த காஜல் அகர்வால் இந்தப் படத்தைக் காண ஆவலாக உள்ளேன். படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்தப் படம் சிறப்பாக இருக்கப் போகிறது என்று ட்வீட் செய்துள்ளார்.



    தவறாக நடக்க முயன்றவருக்கு ’பளார்’விட்ட குஷ்பு - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: