வீடு திரும்பிய நிஷாவுக்கு கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்த குடும்பத்தினர்... வைரலாகும் வீடியோ
வீடு திரும்பிய நிஷாவுக்கு கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்த குடும்பத்தினர்... வைரலாகும் வீடியோ
வீடு திரும்பிய நிஷா
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று நிஷா வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு அவர் தனது வீட்டிற்கு காரில் சென்று இறங்கினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிஷா, தனது வீட்டில் காரில் வந்து இறங்கும் வீடியோ காட்சிகளும், அவருக்கு அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்த காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பிய நிஷா கடந்த 70 நாட்களாக பிரிந்து இருந்த தனது குழந்தையை கட்டிப்பிடித்து அன்பு முத்தம் கொடுத்தார். அதன் பிறகு ’வெல்கம் டு அறந்தாங்கி நிஷா’ என்ற வாசகம் கொண்ட கேக்கை நிஷா குடும்பத்தினர் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடினர்.
முன்னதாக, நேற்று கமல்ஹாசனிடம் பேசிய நிஷா, ஆரம்பத்தில் சரியாகத்தான் விளையாடியதாகவும் இருப்பினும் யார் மனத்தையும் நோகடிக்காமல் விளையாட வேண்டும் என்று தனது பாணியை மாற்றியது தனது தவறு என்பதை தற்போது புரிந்து கொண்டதாகவும் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.