ஆண்ட்ரியாவிற்கு சர்பிரைஸ் கொடுத்த 'பிசாசு 2' படக்குழுவினர்!

ஆண்ட்ரியாவிற்கு சர்பிரைஸ் கொடுத்த 'பிசாசு 2' படக்குழுவினர்!

ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியாவிற்கு படப்பிடிப்பின் போது பிசாசு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

 • Share this:
  நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிசாசு 2 படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  இயக்குனர் மிஷ்கின் 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.பின்பு அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்று அந்த ஆண்டிற்கான ஃபிலிம் ஃபேர் விருதில், சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றார்.

  இதையடுத்து முகமுடி,ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகிய படங்களை இயக்கினார். 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பிசாசு திரைப்படம் ஹாரர் மூவியாக இருந்தாலும் தந்தை மகளிற்கு இடையேயான அன்பின் ஆழத்தை எடுத்துக்காட்டும் படமாக அமைந்து வெற்றிப்பெற்றது.

  இதையடுத்து நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிசாசு பாகம் இரண்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த போஸ்டரில் ஆண்ட்ரியா தலையில் ஸ்கார்ஃப் கட்டிக்கொண்டு கண்ணில் சிரிப்பு,சோகம்,கோபம் ஆகிய அனைத்தையும் உணர்த்தும்படி அமைதியாக அமர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் கருப்பு வெள்ளை நிறத்தில் இருப்பதால் 80 களில் நடக்கும் கதையை தழுவி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


  இந்நிலையில் பிசாசு 2 படக்குழுவினர் நடிகை ஆண்ட்ரியாவிற்கு கேட் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.அந்த கேக்கில் ’our dear pisasu andrea' என்று எழுதப்பட்டுள்ளது.இந்த புகைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: