’கையில் சிகரெட்டுடன் பாத் டப்பில் ஆண்ட்ரியா’..வெளியானது பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

பிசாசு 2

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகும் பிசாச 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

  • Share this:
    முருகானந்தம் தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’.இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.இதில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

    மேலும் நடிகர் விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்க, உடன் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.



    Also read : நடிகர் சூர்யா வெளியிட்ட ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

    பிரபல இயக்குனர் வெற்றிமாறன் பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

    விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: