"கணவர் அடிக்கிறாரு" நேரலையில் அழுத ரசிகை - வி.ஜே ரம்யா கூறிய அட்வைஸ்!

வி.ஜே ரம்யா

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வீட்டில் உங்கள் கணவரிடம் இருந்து பிசிக்கல் மற்றும் மென்டல் அபியூஸ்கள் தொடர்ந்தால், உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல் நம்பிக்கையானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என வி.ஜே ரம்யா தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்த வி.ஜே. ரம்யா திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்திருந்தார். வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரக்கனியில் நடிப்பில் வெளியான சங்கத்தலைவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரம்யா, சோஷியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.

அண்மையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடிய அவர், இன்னைக்கு எப்படி போச்சு? என அனைவரிடமும் ஆவலாக கேட்டார். அப்போது, ரசிகர்களும் ஆவலாக அவருடைய கேள்விகளுக்கு தங்களுடைய சுவாரஸ்யமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். திடீரென ரசிகை ஒருவர், தன்னுடைய கணவர் அடிப்பதாகவும், அதனால் திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனால், மிகவும் எமோஷ்னல் ஆன ரம்யா, ரசிகையின் பதிவு மிகவும் வருத்தமாக இருப்பதாக ஆறுதல் கூறினார்.

இதுபோன்ற பிசிக்கல் மற்றும் மென்டல் அப்யூஸ்கள் இருந்தால், மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறிய அவர், தங்களுக்கு நம்பகமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். “இந்த மாதிரி பிசிக்கல் மற்றும் மெண்டல் பலவந்தங்கள் நிறையவே நடக்கின்றன. உங்களுக்காக நிறையவே வருந்துகிறேன். பணிச்சுமை இருந்தாலோ, பிசிக்கல் மற்றும் மெண்டல் தாக்குதல்கள் சீண்டல்கள் இருந்தாலோ, தனிமையாக ஃபீல் பண்ணினாலோ உங்களுக்கு நம்பிக்கையானவர்களை அணுகுங்கள். தயவுசெய்து உங்களுக்குள்ளேயே வெச்சுக்காதீங்க!” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also read... மனைவி பிராச்சி பிரசவ காலத்தை கொண்டாடும் மகத் - வைரலாகும் புகைப்படங்கள்!

தனக்கென யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் ரம்யா, அதில் ஆரோக்கிய வாழ்வுக்கு தேவையான டையட், யோகா, உடற்பயிற்சி சார்ந்த வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சேனல், கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் ஆக்டிவாக இருக்கிறது. மேலும், நடனம் மூலமாகவும் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது என ஏகப்பட்ட வீடியோக்களை அப்லோட் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, வித்தியாச ஸ்டைல்களில் புடவை கட்டுவது எப்படி, அழகுக் குறிப்புகள், சரும பாதுகாப்பு குறிப்புகள் என அழகு சம்பந்தப்பட்ட வீடியோக்களும் இவருடைய சேனலில் உண்டு. 3 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ்களை வைத்திருக்கும் ரம்யாவின் சேனலில் ஏராளமான காணொளிகள் மில்லியன் வியூஸ்களை கடந்து சென்றிருக்கின்றன.

அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது எப்படி? என்கிற வீடியோ லட்சக்கணக்கில் பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும், கார்டியோ ஓர்க் அவுட், பெண்களுக்கான மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் பிரச்சனை என உடல் ஆரோக்கிய சம்பந்தப்பட்ட காணொளிகளும் லட்சக்கணக்கான வியூஸ்களைப் பெற்றுள்ளது. சின்னத்திரை, வெள்ளித்திரை, சமூக ஊடகங்கள் என மூன்றும் ஒரே நேரத்தில் வெற்றிநடை போட்டுவருகிறார் ரம்யா.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: