Santhanam: சன்டிவி சீரியலில் ’சந்தானம்’ - சுவாரஸ்யமான தகவல்!

நடிகர் சந்தானம்

விஜய் டிவியில் சந்தானம் பங்கேற்ற லொள்ளு சபா நிகழ்ச்சி அவருக்கு பெரும் வரவேற்பையும், புகழ் வெளிச்சத்தையும் பெற்றுத் தந்தது.

  • Share this:
நடிகர் சந்தானம் சன்டிவியில் ஒளிபரப்பான அண்ணாமலை சீரியலில் நடித்த புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் முத்திரைப்பதித்தவர்களில் முக்கியமானவர் நடிகர் சந்தானம். காமெடி, கவுண்டர்களில் ’கிங்’-ஆன அவர், 2004ம் ஆண்டு நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ’மன்மதன்’ திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். ஆனால் அதற்கு முன்னர் பல்வேறு சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில் நடித்த அவரின் பெயர் பரவலாக அறியப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜய் டிவியில் சந்தானம் பங்கேற்ற லொள்ளு சபா நிகழ்ச்சி அவருக்கு பெரும் வரவேற்பையும், புகழ் வெளிச்சத்தையும் பெற்றுத் தந்தது. மேடை நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் சின்னத்திரை தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். 2002ம் ஆண்டு நடிகை ராதிகா நடித்த அண்ணாமலை தொடர் சன்டிவியில் ஒளிபரப்பானது. அந்த தொடரில் நடிகர் சந்தானம் மிகச்சிறிய ரோலில் நடித்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. லொள்ளு சபாவில் நடித்து மட்டுமே அவர் முன்னுக்கு வந்ததாக நினைக்கும் பலர், அண்ணாமலை உள்ளிட்ட தொடர்களில் சந்தானம் நடித்துள்ள பழையப் புகைப்படங்களை பார்த்து, அட கவனிக்க தவறிவிட்டோமோ? என பேசிக் கொள்கின்றனர்.

ஹீரோவுக்கு நண்பனாக அல்லது காமெடி வில்லனாக திரைப்படங்களில் வந்து சந்தானம் செய்த காமெடி அலப்பறைகள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. 2005 ஆம் ஆண்டின் பிற்பகுதிகளில் இருந்து அவருடைய வெள்ளித்திரைப் பயணம் மெதுவாக உச்சத்தை நோக்கி பயணித்தது. விஜய், ஜெனிலியா, வடிவேலு கூட்டணியில் வெளியான சச்சின் திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. காமெடி மற்றும் டைமிங் காமெடிகள் நிறைந்திருக்கும் இந்தப் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து சந்தானமும் நடித்தார்.

Also read... Dhanush: ஹைதராபாத்தில் தனுஷ் - கார்த்திக் நரேனுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்!

பின்னர், தனுஷூடன் பொல்லாதவன், இயக்குநர் சங்கர் தயாரிப்பில் வெளியான அறை எண் 305-ல் கடவுள் ஆகிய படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். இயக்குநர் ராஜேஷூடன் இணைந்த சந்தானம் அவரின் அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்து காமெடி ஸ்டாராக உருவெடுத்தார். சிவா மனசுல சக்தி படத்தில் நடிகர் ஜீவாவுக்கு நண்பனாகவும், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு நண்பனாகவும் நடித்தார்.

இந்த இரண்டு படங்களும் காமெடியில் மிக பெரிய ஹிட்டை கொடுத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் கல்லாகட்டியது. அடுத்து ஒரு கல் கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்த சந்தானத்துக்கு விஜய் டிவியின் சிறந்த காமெடியின் விருது அடுத்தடுத்து கிடைத்தது. பின்னர், சுந்தர் சி, ஏ.எல் விஜய், சிவா உள்ளிட்ட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய சந்தானம், தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் சபாபதி என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: