• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’விஜய் 63’ பட இயக்குநருடன் ’பேட்ட’ டெக்னீஷியன் திடீர் சந்திப்பு

’விஜய் 63’ பட இயக்குநருடன் ’பேட்ட’ டெக்னீஷியன் திடீர் சந்திப்பு

இயக்குநர் அட்லீயுடன் விஜய்

இயக்குநர் அட்லீயுடன் விஜய்

பேட்ட படத்தின் புரொடக்‌ஷன் டிசைனர் 'விஜய் 63' படத்தின் இயக்குநர் அட்லீயை சந்தித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பேட்ட படத்தின் புரொடக்‌ஷன் டிசைனர் 'விஜய் 63' படத்தின் இயக்குநர் அட்லீயை சந்தித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் புரொடக்‌ஷன் டிசைனராக பணியாற்றிய சுரேஷ் செல்வராஜன் நீண்ட இடைவெளிக்கு பின் தனது நெருங்கிய நண்பரான இயக்குநர் அட்லீயை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்த தகவலை புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் சுரேஷ் செல்வராஜன்,  "நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது நண்பரை சந்தித்ததாகவும், இந்த சந்திப்பு தனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்ததாகவும்" கூறியுள்ளார்.



இந்த சந்திப்பின் மூலம் சுரேஷ் செல்வராஜன் , விஜய் 63 படத்திலும் புரொடக்‌ஷன் டிசைனராக பணிபுரிய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.



இயக்குநர் அட்லீ விஜய்யை வைத்து இயக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதோடு இந்தப் படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வசூல் நாயகன் விஜய்-யின் வெற்றி ரகசியம்! - வீடியோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: