பேட்ட: கெட்ட வார்த்தை, ரத்தக்கறை காட்சிகளுக்கு `நோ’... ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

பேட்ட

பேட்ட படத்தின் தணிக்கை விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பேட்ட படத்தின் தணிக்கை விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் பேட்ட. படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியிருக்கும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு 'UA' சான்றிதழ் வழங்கியுள்ளது. தற்போது பேட்ட படத்தின் ரன்னிங் டைம் மற்றும் தணிக்கைக் குழுவால் செய்யச் சொன்ன முக்கிய மாற்றங்கள் என்னவென்ற விவரம் தெரிய வந்துள்ளது. அதன்படி பேட்ட படம் 171.54 நிமிடங்கள் நீளமுடைய படம் என்றும் படத்தில் இடம்பெற்றுள்ள கெட்ட வார்த்தைகள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  Petta - Vijay Sethupathi

  மேலும் துப்பாக்கியால் சுடும் காட்சியும், ரத்தக்கறை காட்டப்படும் காட்சியையும் மாற்றியமைக்க தணிக்கைக் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகும் விஸ்வாசம் படத்துக்கு  'U' சான்றிதழ் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  சதுரங்க வேட்டை படம் பாணியில் புது மோசடி QNET - வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published: