மெர்சல் படத்தை கொண்டாடிய ஜி.வி.பிரகாஷ்!

ஜி.வி.பிரகாஷ்

மெர்சல் படத்தின் முதல் காட்சியை ஜி.வி.பிரகாஷ் திரையரங்கில் கொண்டாடுவது போல ‘Peter Beatu Yethu' பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சர்வம் தாளமயம் படத்தில் இடம்பெற்றுள்ள பீட்டர் பீட்ட ஏத்து (Peter Beatu Yethu) என்ற பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டது.

  ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் சர்வம் தாளமயம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் பிப்ரவரி 1-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பலரது பாராட்டுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘Peter Beatu Yethu' என்ற பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டது  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய்யின் தலைவா, தெறி ஆகிய படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார் . தான் நடிக்கும் படங்களிலும் விஜய்யின் வசனங்கள், காட்சிகள் என சிலவற்றை வைத்து தான் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதை வெளிப்படுத்து வருகிறார். சர்வம் தாளமயம் படத்திலும் விஜய்யின் ரசிகராகவே அவர் வலம் வருகிறார்.

  தற்போது வெளியான ’Peter Beatu Yethu' என்ற பாடல், நாயகன் கல்லூரியில் பரீட்சை எழுதிவிட்டு மெர்சல் படம் பார்க்க தியேட்டருக்கு வருவதுபோல் படமாக்கப்பட்டுள்ளது. முழு பாடலையும் மெர்சல் படத்தின் முதல் காட்சியை திரையரங்கில் கொண்டாடுவதுபோல படமாக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகராக தியேட்டரில் ஆட்டம், பாட்டம் என ஜி.வி.பிரகாஷ் கொண்டாடும் காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குநர் ராஜீவ் மேனன்.  விஜய்யை மையப்படுத்தி பாடல் வெளியாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர் . பாடலின் யூடியூப் லிங்-கை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

  Also watch

  Published by:Prabhu Venkat
  First published: