முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் ரசிகர்களுக்காக வெளியான சர்வம் தாளமயம் பாடல் - வீடியோ

விஜய் ரசிகர்களுக்காக வெளியான சர்வம் தாளமயம் பாடல் - வீடியோ

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

சர்வம் தாளமயம் படத்தில் இடம்பெற்றுள்ள பீட்டர் பீட்டு ஏத்து என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சர்வம் தாளமயம் படத்தில் இடம்பெற்றுள்ள பீட்டர் பீட்டு ஏத்து என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் சர்வம் தாளமயம். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறைவு பெற்றிருக்கின்றன. படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ரவியாதவ் ஒளிப்பதிவு செய்ய அந்தோணி படத்தொகுப்பு செய்துள்ளார். கடந்த 23-ம் தேதி படத்தின் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர் அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

டிசம்பர் 28-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். இசையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பது படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

ஏற்கெனவே படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் படத்தின் மூன்றாவது பாடலான பீட்டர் பீட்டு ஏத்து என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலில் விஜய் ரசிகராக ஜி.வி.பிரகாஷ் தோன்றியிருப்பதால் விஜய் ரசிகர்களின் ஆதரவையும் இந்தப் பாடல் பெற்றுள்ளது.

' isDesktop="true" id="78217" youtubeid="9O-jN4S_vu0" category="entertainment">

First published:

Tags: Gv praksh kumar, Sarvam thaala mayam