Home /News /entertainment /

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கும் நடிகர் பவன் கல்யாண்..!

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கும் நடிகர் பவன் கல்யாண்..!

பவன் கல்யான்

பவன் கல்யான்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க முதல்வர் மற்றும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் ரூ.2 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

கொடிய வைரஸான கொரோனாவால் பாதிக்கப்பட்டு உலகம் முழுக்க 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் ஊரடங்கு மிக அவசியமான நடவடிக்கை என்றார்.

இதையடுத்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துவாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நெருக்கடியை சமாளிக்க நடிகர் பவன் கல்யாண் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் ரூ.1 கோடியை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



மேலும் படிக்க: கொரோனாவிலிருந்து தப்பிக்க ஊரடங்கு மட்டும் போதாது- உலக சுகாதார நிறுவனம்
Published by:Sheik Hanifah
First published:

Tags: Pawan Kalyan

அடுத்த செய்தி