பிக்பாஸ் போட்டியாளர்கள் வீட்டினுள்ளே இருக்கும் போது, அவர்களை பற்றிய வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுவது வழக்கமான ஒன்று. இந்த சீசனில் பிக்பாஸ் விட்டிற்கு சென்ற அடுத்த நாளே, அபிஷேக் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. அதில் அபிஷேக் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து பேசியிருப்பார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இப்படி பேசிவிட்டு ஏன் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றாய் என பல கேள்விகளை கமெண்டாக பதிவிட்டு வந்தனர். ஆனால் அந்த சில நாட்களிலே அதை மறந்துவிட்டனர்.
தற்போது புதிதாக பாவனி ரெட்டியை பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து விட்டதாகவும், அதை மறைத்து பவானி ரெட்டி பிக்பாஸ் வீட்டில் நடிக்கிறார் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
நேற்றைய பிக்பாஸ் வீட்டில் பவானி ரெட்டி தனது கதையை ஹவுஸ் மேட்ஸிடம் பகிர்ந்துக்கொண்டார். ‘நான் முதலில் நியூஸ் பேபர்ல இருக்க நம்பர் பாத்து மாடலிங் ட்ரை பண்ணேன். அப்படியே சினிமா, நாடகம்னு போயிட்டு இருந்துச்சு, திடீர்னு ஒரு நாள் லவ் ஸ்டோரி ஸ்டார்ட் ஆயிடுச்சு.அப்பறம் வீட்ல எனக்கு பாய் ஃப்ரண்ட் இருக்குனு சொல்லிட்டேன்.ஆனா அவுங்க கல்யாணத்துக்கு ஒதுக்கல. நான் வீட்ட விட்டுட்டு பிரதீப்காக வெளிய வந்துட்டேன். வந்த அப்பறம் என்னா பண்ணலாம்னு யோசிச்சோம்.அப்ப தான் ரெண்டு பேருக்கும் ஒரே சீரியல்ல ஹீரோ, ஹீரோயின் வாய்ப்பு கிடச்சது. அப்பறம் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அப்பையே வீடு வாங்குனோம்.அப்புறம் ஒரு நாள் எங்க அண்ணா பர்த்டே வந்துச்சு அன்னைக்கு பிரதீப் ரொம்ப குடிச்சிருந்தான். அவன் கார் எடுத்துட்டு வெளிய போயிட்டு வந்தான், அப்ப நான் உனக்காக எல்லாரையும் விட்டு வந்திருக்கேன் உனக்கு எதாச்சும் ஆச்சுன்னா என்ன பண்ணுவேனு கேட்டேன், அவங்க அத தப்பா புரிஞ்சிடாங்க.எங்கக்குள்ள பெரிய சண்டைக்கூட இல்ல. நீ இந்த மாதிரி பண்ணா வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் சொன்னேன், நீ எப்படி போறேன்னு பாக்குறன்னு பிரதீப் சொன்னாங்க.காலையில ரூம் உள்ள பார்த்த பிரதீப் suicide பண்ணிருக்காங்க.அதை பாத்து எனக்கு அழுவறதா இல்ல நான் தப்பு பண்ணலன்னு நிரூபிக்கிறதான்னு எனக்கு தெரியலன்னு’ தனது மொத்தை கதையையும் பவானி கூற வீட்டில் உள்ளவர்கள் கண்கலங்கினர்.
View this post on Instagram
மேலும் அவர் கணவர் இறந்த பிறகு வேறு ஒருவரை காதலித்து திருமணம் வரை சென்றதாகவும். ஆனால் அந்த திருமணம் நடக்கவில்லை என்றும் தெரியப்படுத்தினார். பவானி ரெட்டி பிக்பாஸ் வீட்டில் சொன்ன இந்த விஷயம் தான் தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில் பவானி ரெட்டியின் இரண்டாவது திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பவானி ரெட்டியில் சகோதரி சிந்து ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.
View this post on Instagram
அதில் ‘நான் சிந்து பாவனி ரெட்டியின் மூத்த சகோதரி.பாவனியை பற்றியும் அவள் உறவுகளை பற்றியும் சமூக ஊடகங்களில் பரவி வரும் சில போலி செய்திகளையும் தெளிவுபடுத்தி விளக்க விரும்புகிறேன். ‘ பாவனி அவளது கணவர் ப்ரதீப் குமாரின் எதிர்பாராத மறைவிற்கு பிறகு மறுமணம் செய்துக்கொள்ளவில்லை. பாவனி அவள் கணவர் மீது மிகவும் பாசத்துடன் இருந்தாள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியான தம்பதியினராக இருந்தார்கள். பிரதீப் மறைவிற்கு பிறகு அவரின் நினைவுகள் அவளைவிட்டு நீங்கவில்லை. அவருடன் அவள் வாழ்ந்த நாட்கள் அவளுக்கு என்றென்றும் பசுமையான நினைவுகளே.ஆனால் அவள் சமீப காலமாக வேறு ஒருவரை விரும்பினாள். நாங்கள் குடும்பமாக அவளின் விருப்பப்படியே அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தர விரும்பினோம். ஆனால் சில பல காரணங்களால் பரஸ்பர புரிதலுடன் சுமூகமாக பிரிந்தினர். அவள் கடந்த 4 வருடங்களாக கணவரின் மறைவிற்கு பின் தனது வாழ்க்கையை மிக கண்ணியமாக தைரியமாக வாழ கற்றுக்கொண்டாள். தனது தொழிலில் முன்னுக்கு வந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதில் மிக ஆர்வமாக உள்ளார். எனவே அனைத்து ஊடக பணியாளர்களும், ரசிகர்களும் மற்றும் அவளுடையை நலன் விரும்பிகளும் அவளின் உணர்வுகளையும் தனி நபர் உரிமைகளையும் மதித்து அவளின் இந்த பயணத்தில் உங்கள் ஆதரவை இன்று போல் என்றும் அளிக்குமாறு நாங்கள் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார். இதே பதிவு பவானி ரெட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Album