பட்டாஸ்... முதல் பாடல் ‘ச்சில் ப்ரோ’ ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பட்டாஸ்

  • Share this:
    பட்டாஸ் படத்தின் முதல்பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் கடந்த மார்ச் மாதத்தில் துவங்கியது. புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    கடந்த ஜூலை மாதத்தில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்த படக்குழு தற்போது படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதன்படி ‘ச்சில் ப்ரோ’ என்ற பாடல் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர் தனுஷின் தீவிர ரசிகர்கள்.


    Published by:Sheik Hanifah
    First published: