முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விவாத நிகழ்வில் தவறான வார்த்தைப் பிரயோகம்... மன்னிப்புக் கேட்ட பார்வதிக்கு குவியும் பாராட்டு!

விவாத நிகழ்வில் தவறான வார்த்தைப் பிரயோகம்... மன்னிப்புக் கேட்ட பார்வதிக்கு குவியும் பாராட்டு!

நாயகன் விஜய் தேவரகொண்டா முன்னிலையிலேயே நடிகை பார்வதி குற்றச்சாட்டை வைத்தது பல தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றது.

நாயகன் விஜய் தேவரகொண்டா முன்னிலையிலேயே நடிகை பார்வதி குற்றச்சாட்டை வைத்தது பல தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றது.

நாயகன் விஜய் தேவரகொண்டா முன்னிலையிலேயே நடிகை பார்வதி குற்றச்சாட்டை வைத்தது பல தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றது.

  • 1-MIN READ
  • Last Updated :

மலையாள நடிகை பார்வதி சமீபத்தில் இந்தியாவின் முக்கிய நடிகர்கள் கலந்துகொண்ட விவாத சினிமா நிகழ்வு ஒன்றில் கலந்துரையாடினார்.

அந்த நிகழ்வில் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் பெண்களுக்கு எதிரான பாலின வெறுப்பைக் காட்டுவது போன்ற காட்சிகளைக் காட்டுவது தவறு எனக் கூறினார். அத்திரைப்பட நாயகன் விஜய் தேவரகொண்டா முன்னிலையிலேயே நடிகை பார்வதி குற்றச்சாட்டை வைத்தது பல தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றது.

இதுகுறித்த விளக்கத்தின் போது, நடிகை பார்வதி அர்ஜுன் ரெட்டி- ஜோக்கர் ஆகிய திரைப்படங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டையும் புரிய வைத்தார். அத்தகைய சூழலில் ‘பைபோலார் செயல்பாடு’ என்னும் வார்த்தையைப் பயன்படுத்தினார்.

Bipolar disorder என்பது ஒரு வகையான மனநலம் சார்ந்த பாதிப்பு. இந்த பாதிப்பு உள்ளோர் இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ட்விட்டர்வாசி ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு உடனடியாக பதிலளித்த பார்வதி, “நான் செய்தது மிகப்பெரிய தவறு. என் வார்த்தைப் பிரயோகத்தை கண்டிப்பாக சரிசெய்ய வேண்டும். இதை என் கவனத்துக்கு கொண்டு வந்ததற்காக மிகவும் நன்றி. கற்றுக்கொள்கிறேன். தவறானதை மறந்து புதிதாகக் கற்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: ’பெரிய வீடு வாங்கிட்டேன்... பயமா இருந்துச்சு’- பயத்துக்கு தீர்வு கண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா!

First published:

Tags: Actress Parvathy