இந்தி அறிந்தவர்களுக்கு பார்த்திபன் விடுத்திருக்கும் வேண்டுகோள்...!

பார்த்திபன்

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ஒத்த செருப்பு, சிறப்பு நடுவர் விருது மற்றும் சிறந்த ஒலிக்கலவைக்கான தேசிய விருதையும் பெற்றது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தி திணிப்புக்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிற நேரத்தில், இந்தி அறிந்தவர்களுக்கு மட்டும் அப்படியென்ன வேண்டுகோள் என்று ஆவேசம் வேண்டாம். இது வேறு. அவரது படம் குறித்தது.

பார்த்திபன் இயக்கி நடித்து கடைசியாக வெளிவந்த படம், ஒத்த செருப்பு சைஸ் 7. இந்தப் படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். தயாரிப்பும் அவரே. சந்தோஷ் நாராயணன் இசை, ராம்ஜி ஒளிப்பதிவு என தொழில்நுட்ப சைடில் பக்கா டீமுடன் படத்தை எடுத்திருந்தார். 2019 ஆகஸ்ட் 30 சிங்கப்பூர் தெற்காசிய திரைப்பட விழாவில் முதல்முறை இப்படம் திரையிடப்பட்டது. அதே வருடம் செப்டம்பர் 20 படம் திரைக்கு வந்து, பரவலான வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ஒத்த செருப்பு, சிறப்பு நடுவர் விருது மற்றும் சிறந்த ஒலிக்கலவைக்கான தேசிய விருதையும் பெற்றது. இந்தப் படத்தை இந்தியில் வெளியிட விரும்புகிறார் பார்த்திபன். அதனையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

Also read... Rajamouli : குறும்படம் இயக்கும் ராஜமௌலி...!

'ஒத்த செருப்பு size 7' ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்... என அந்த கமெண்டில் குறிப்பிட்டுள்ளார். படத்தை இந்தியில் 'டப்' செய்யப் போகிறாரா இல்லை ரீமேக்கா என்பதை அவர் குறிப்பிடவில்லை.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: