இயக்குநர் ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘A1’. இத்திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் ஜான்சன்.கே இயக்கத்தில் மீண்டும் இணைந்தார் நடிகர் சந்தானம். ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்ற டைட்டிலுடன் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனைகா சோடி, சஷ்டிகா ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு ஆர்தர் கே.வில்சன் ஒளிப்பதிவாளராகவும், பிரகாஷ் பாபு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். படத்தின் ட்ரெயலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் பிப்ரவரி 12-ம் தேதி ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
இதையடுத்து படத்தின் புரமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது படக்குழு. இந்நிலையில் இன்று படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய சந்தோஷ் நாராயணன், “ஏ1 படம் பண்ணும் போது இயக்குநர் ஜான்சனிடம் ஒரு விஷயத்தை கவனித்தேன். நாம் வடசென்னையை திரையில் ஒரு விதமாக பார்த்துள்ளோம். வெகு சில இயக்குநர்கள் அதை ரொம்ப ஜாலியாக காட்டியுள்ளனர். அதில் ஜான்சன் மிக முக்கியமானவர். ஜாதிகளை கடந்து காதல், மதங்களை கடந்து நட்பு உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் ரொம்ப சாதாரணமாக சொல்லியிருக்கிறார். அதனால் தான் ஜான்சன் ஒரு ஸ்பெஷல் நண்பர்.
பாரிஸ் ஜெயராஜ் மூலம் ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆல்பம் முழுக்கவே கானா பாடல்கள் தான். நம்முடைய நாட்டுப்புற இசை கானா தான். சுமார் 300 ஆண்டுகளாக அதைக் கொண்டாடியிருக்கிறோம். நம்முடைய பாரம்பரிய இசையை சினிமாவில் கொண்டு வர முடிந்தால் அதைவிட பெரிய விஷயம் எதுவுமே இல்லை. இந்தப் படத்தின் காட்சிகளுக்கு பின்னணி இசை அமைக்க தாமதம் ஆனது. ஏனென்றால், காட்சிகளைப் பார்த்து சிரித்துவிடுவேன். ஆகையால் ரொம்ப தாமதமானது. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்று கூறினார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.