• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரஸ் மீட்டில் உளறித்தள்ளிய இயக்குநர் - சலசலப்பை சரிகட்டிய சந்தானம்

பிரஸ் மீட்டில் உளறித்தள்ளிய இயக்குநர் - சலசலப்பை சரிகட்டிய சந்தானம்

சந்தானம்

சந்தானம்

கார் விபத்துக்குள்ளானதால் இயக்குநர் குழப்பத்தில் இருப்பதாக சொல்லி சமாளித்தார் சந்தானம்

  • Share this:
பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ஜான்சன் தன்னையே அறியாமல் உளறி தள்ளியதால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் நடிகர் சந்தானம் குறுக்கிட்டு நிலைமையை சரி செய்தார்.

சந்தானம், அனைகா சோதி நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை விளம்பரப்படுத்தும் விதமாக சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் இயக்குநரின் கார் விபத்தில் சிக்கியதால் அவர் வரமாட்டார் என தொகுப்பாளர் மேடையில் அறிவித்தார்.

ஆனால் நிகழ்ச்சி முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இயக்குநர் ஜான்சன் அரங்கிற்கு வந்தார். ஆனால் அவர் பேசத் தொடங்கிய நேரம் முதலே அவர் தெளிவாக இல்லை என்று பத்திரிகையாளர்கள் பேசத் தொடங்கினர். நான் எல்லாம் ஒர்த்தே இல்ல. படத்தை ஜாலியா பாக்கலாம் அவளோதான். ஆனால் நான் ஒர்த் இல்ல என்று மீண்டும் மீண்டும் ஒரே வார்த்தையை சொல்லிக் கொண்டு இருந்தார்.



படக்குழுவினரின் பெயர்களை கூட சரியாக சொல்ல முடியாமல் இயக்குநர் ஜான்சன் தொடர்ந்து உளறிக் கொண்டே இருந்தார். நாயகி அனைகா சோதியின் பெயரை ஆயா உள்ள பாட்டி என்றார். பின்னர் தொகுப்பாளர் அதனை திருத்தி சொல்லிக் கொடுத்தார்

இயக்குநர் ஜான்சன் பேசி முடித்ததும், நீங்கள் ஒர்த் இல்ல ஒர்த் இல்லனு சொல்லிக்கிட்டு இருக்கீங்களே., மக்களும் படம் ஒர்த் இல்லனு சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு யாரும் எதிர்பார்க்கா விதமாக போகட்டும் எனக்கு கவலை இல்லை என பதில் அளித்தார்.



இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகர் சந்தானம், உடனடியாக சுதாரித்துக் கொண்டு இடைமறித்தார். கார் விபத்துக்குள்ளானதால் இயக்குநர் குழப்பத்தில் இருப்பதாக சொல்லி சமாளித்தார். இயக்குநர் ஜான்சனின் இந்த உளறல் பேச்சு பத்திரிகையாளர் மட்டுமல்லாமல் படக்குழுவினரையும் முகம் சுளிக்க வைத்தது.

இறுதியாக இயக்குநரை தனியாக சந்தித்தபோது என்னென்னமோ பேசிட்டேன் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இனிமேல் வருத்தப்பட்டு என்ன செய்ய என்று பத்திரிகையாளர்கள் தலையில் அடித்துக் கொண்டு சென்றனர். எதனால் கார் விபத்துக்குள்ளானது. எதனால் இயக்குநர் உளறினார் என்பது அவருக்குதான் வெளிச்சம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: